தமிழக மீனவர்கள் 10 பேருக்கு செப்டம்பர் 6ம் தேதி வரை சிறை - இலங்கை நீதிமன்றம் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை வரும் செப்டம்பர் 6-ந்தேதி வரை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த ஆகஸ்ட் 22-ந்தேதி படகில் மீன்பிடிக்கச் சென்ற 10 தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை முல்லைத்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்தது. 

அதுமட்டுமில்லாமல் அவர்களது படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது. இதையடுத்து தமிழக மீனவர்கள் 10 பேரையும் இலங்கையில் உள்ள திரிகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணையின் போது, கைது செய்யப்பட்ட 10 மீனவர்களையும் வரும் செப்டம்பர் 6-ந்தேதி வரை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

10 Tamil Nadu fishermen jailed till September 6


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->