முதுமலை : யானை தாக்கி உயிரிழந்த பாகன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


முதுமலையில் யானை தாக்கி உயிரிழந்த பாகன் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்க முதல் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு மற்றும் அபயாரண்யம் பகுதிகளில் யானைகள் முகாம் உள்ளது. இங்கு ஒவ்வொரு யானைக்கும் பாகன் நியமிக்கப்பட்டு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் தெப்பக்காடு முகாமில் மசினி என்ற யானையை பராமரித்து வந்த பாகன் பாலன்(54) என்பவர், இன்று காலை வழக்கம்போல் யானைக்கு உணவளிக்க சென்றுள்ளார்.

அப்பொழுது திடீரென யானை பாலனை பலமாக தாக்கியுள்ளது. இதையடுத்து உடன் பணிபுரிந்தவர்கள் உயிருக்கு போராடிய பாலனை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் பாலன் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், மசினி யானை தாக்கி உயிரிழந்த பாகன் பாலன் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பாலன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10 lakh compensation announced for the Bagan family who died after being attacked by an elephant in Mudumalai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->