டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி.. இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு.. முக்கிய வீரருக்கு காயம்.! - Seithipunal
Seithipunal


டி20 மற்றும் ஒரு நாள் உலகக்கோப்பை போட்டிகளை போன்று டெஸ்ட் போட்டிக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் நடத்தப்படுகிறது.

இதில், முதலாவது உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்த அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த நிலையில் 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும்  ஜூன் (7-11) மாதம் இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த இறுதி போட்டியில் விளையாட இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் தகுதி பெற்றுள்ளது.

இதனையடுத்து ஆஸ்திரேலிய வீரர்கள் மற்றும் இந்திய வீரர்கள் இங்கிலாந்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற மும்முரம் காட்டி வருகிறது.

அந்த வகையில் இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை சுப்மன் கில், விராட் கோலி, புஜாரா, அஜின்க்யா ரகானே  நல்ல பார்மில் உள்ளனர். மேலும், பந்துவீச்சில் சிராஜ் மற்றும் ஷமி சிறப்பான ஃபார்மில் உள்ளதால் இந்திய அணி வலுவாக உள்ளது.

அதேபோல் ஆஸ்திரேலியா அணியும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்காக கடந்த ஒரு மாத காலமாக தீவிர பயிற்சி செய்து வருகிறது. எனவே சாம்பியன் பட்டத்தை வெல்ல இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி மிகவும் விறுவிறுப்பாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு பயிற்சியின் போது இடது கட்டை விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக பயிற்சியில் இருந்து பாதியில் வெளியேறியுள்ளார்.

நாளை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தொடங்கவிருக்கும் நிலையில், தற்போது கேப்டன் ரோஹித் சர்மா காமடைந்திருப்பது இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

WTC2023 Indian captain Rohit Sharma injured in Finger


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->