ஐந்து கோரிக்கையுடன் மத்திய அமைச்சரை சந்தித்த, மல்யுத்த வீராங்கனைகள்! - Seithipunal
Seithipunal


மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரை மல்யுத்த வீரர்களும் வீராங்கனைகளும் சந்தித்து பேசினர். அவ்வாறு சந்தித்து பேசும்போது ஐந்து நிபந்தனங்களை முன் வைத்துள்ளனர்.

நேற்று இரவு தனது ட்விட்டர் பக்கத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது; மல்யுத்த வீராங்கனைகளின் பிரச்சினை தொடர்பாக அவர்களுடன் விவாதிக்க அரசு தயாராக இருக்கிறது.

பேச்சுவார்த்தைக்கு வருமாறு அவர்களுக்கு மீண்டும் அழைப்பு விடுக்கிறேன்" என்று தெரிவித்திருந்தார். இந்த அழைப்பை ஏற்று டெல்லியில் உள்ள அனுராக் தாக்குரின் இல்லத்துக்கு மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் சென்றனர்.

மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தலை வெளிப்படையாக நடத்த வேண்டும்.

மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக பெண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

தற்போதைய தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மல்யுத்த கூட்டமைப்பில் பிரிஜ் பூஷன் சிங்கின் குடும்பத்தினர் யாரும் இடம்பெறக் கூடாது.

கடந்த 28ம் தேதி நடந்த போராட்டத்தை அடுத்து தங்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்ற, இந்த ஐந்து கோரிக்கைகளை முன் வைக்கும் போது வினேஷ் போகத் இடம்பெறவில்லை. தனது சொந்த கிராமத்தில் பஞ்சாயத்து ஒன்றில் பங்கு கொள்ள அவர் சென்றிருப்பதால் இந்த சந்திப்பில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Wrestlers Meets The Union Minister


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->