INDvsAUS: தேங்க்ஸ் ஜீசஸ்...! ஆட்டநாயகி ஜெமிமா ரோட்ரிக்ஸ்-ன் உணர்ச்சி வசமான பேட்டி வைரல்! 
                                    
                                    
                                   Womens World Cup India Australia Jemimah Rodrigues 
 
                                 
                               
                                
                                      
                                            மகளிர் உலகக் கோப்பை அரையிறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி அசத்தலான வெற்றி பெற்றது. 339 ரன் என்ற இமாலய இலக்கை விரட்டிய இந்திய அணி 48.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 341 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
ஜெமிமா ரோட்ரிக்ஸ் 134 பந்துகளில் 127 ரன்கள் (14 பவுண்டரி) அடித்து ஆட்டமிழக்காமல் விளையாடினார். அவருடன் அமன்ஜோத் கவுர் 15 ரன்களுடன் இணைந்தார். எக்ஸ்டிரா வகையில் 15 வைடு பந்துகள் உட்பட 26 ரன்கள் கிடைத்தன.
இது மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் விரட்டிப்பிடித்த மிக உயர்ந்த இலக்காகும். இதற்கு முன்பு இதே உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா 331 ரன்களை துரத்தி வென்றது சாதனையாக இருந்தது. அந்த சாதனையை இந்திய அணி முறியடித்து, அதே ஆஸ்திரேலியாவிடம் பழிவாங்கியது குறிப்பிடத்தக்கது.
மேலும், மகளிர் உலகக் கோப்பையில் தொடர்ந்து 15 ஆட்டங்களில் வெற்றி பெற்று வந்த ஆஸ்திரேலியாவின் வெற்றித் தொடர் இதன் மூலம் முறிந்தது.
 ஆட்டநாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெமிமா ரோட்ரிக்ஸ், வெற்றிக்குப் பிறகு உணர்ச்சிவசப்பட்டு ஆனந்தக் கண்ணீர் விட்டார். “இது எனக்கே நம்ப முடியாத தருணம். இந்தியாவை வெற்றி பெறச் செய்வதே என் கனவு. கடந்த உலகக் கோப்பையில் இருந்து நீக்கப்பட்ட வேதனை இன்னும் மனதில் உள்ளது. அப்போது ஒவ்வொரு நாளும் அழுதேன். ஆனால் கடவுள் சரியான நேரத்தில் பதில் அளித்தார். என்மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றி,” என அவர் நெகிழ்ந்தார்.
                                     
                                 
                   
                       English Summary
                       Womens World Cup India Australia Jemimah Rodrigues