அஸ்வினை ஆடும் லெவனில், எடுக்காதது ஏன்?!
Why Ashwin Was Not Included In The Playing ll
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் இடது கை பேட்ஸ்மன்களுக்கு சவாலாக இருக்க கூடிய சிறந்த ஆஃப் ஸ்பின்னரான அஸ்வினை ஆடும் லெவனில் எடுக்காதது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.
பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சாளர்களின் பங்கும் முக்கியமானதாக கருதப்படும். இந்திய அணியின் சிறந்த ஆஃப் ஸ்பின்னர் அஸ்வின் மற்றும் சிறந்த லெக் ஸ்பின்னர் ஜடேஜா என இருவரும் பந்து வீச்சில் மட்டுமல்லாது பேட்டிங்கிலும் சிறப்புடன் செயல்படும் ஆல் ரவுண்டர்கள் உள்ள நிலையில் எவரை அணியில் எடுப்பார்கள் என்று விவாதங்கள் நடந்துகொண்டே இருந்து.

இந்நிலையில், டாஸை வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அஸ்வின் பெயர் இல்லாத ஆடும் லெவனை அறிவித்தது அஸ்வின் ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இதற்கான விளக்கம் அளித்த கேப்டன் ரோகித் சர்மா, ஆடும் லெவனில் அஸ்வின் இல்லாதது கடினமான ஒன்றுதான், ஆனால் அணியின் வெற்றி மற்றும் ஆடும் சூழல் ஆகியவற்றிற்காக அவரை தவிர்க வேண்டிய கட்டாயம் உள்ளது என தெரிவித்தார்.
அஸ்வினுக்கு பதிலாக உமேஷ் யாதவை இந்திய அணி தேர்வு செய்து நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியுள்ளது
English Summary
Why Ashwin Was Not Included In The Playing ll