இந்த உலக கோப்பையை வெல்லப்போவது எந்த அணி? 'தாதா' கங்குலியின் அசத்தல் கணிப்பு! - Seithipunal
Seithipunal


வருகின்ற அக்டோபர் 5ம் தேதி முதல் இந்தியாவில் ஐசிசி ஒரு நாள் உலகக் கோப்பை தொடர் தொடங்க உள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, ஸ்ரீலங்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், 

கோப்பையை வெல்லப்போவது எந்த அணி? அரையிறுதிக்கு எந்த அணிகள் முன்னேறும்? இறுதிப்போட்டியில் எந்தெந்த அணிகள் மோதும் போன்ற கணிப்புகளை, ஓய்வு பெற்ற முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, உலக கோப்பை அரை இறுதியில் போட்டியிடப் போகும் ஐந்து அணிகளை கணித்துள்ளார்.

 


 

அதன்படி, இந்த உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகள் இடம்பெறும் என்று கங்குலி உறுதியாக கணித்துள்ளார்.

மேலும் பாகிஸ்தான் அணியும் அரையிறுதி போட்டியில் விளையாடுவதற்கு உண்டான தகுதியான அணி தான் என்று கங்குலி தனது கணிப்பினை வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்திய அணி இந்த உலகக் கோப்பையை வெல்லுமா? இந்திய அணி எப்படி சிறப்பாக விளையாட வேண்டும் என்ற கேள்விக்கு கங்குலி தெரிவிக்கையில், 

ஐசிசி கோப்பைக்கான தொடரின் முக்கியமான கட்டங்களில் இந்திய அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில்லை. 

இதற்கு வீரர்களின் மன அழுத்தம் தான் காரணம் என்று நான் சொல்ல மாட்டேன். அந்த நேரத்தில் எப்படியான திட்டங்களை களத்தில் வகுத்து, இந்திய அணி செயல்படுகிறது என்பதை பொருத்தது என்று உறுதியாக கூறுவேன்.

இந்திய அணி வீரர்களை பொருத்தவரை மனதளவில் வலுவானவர்கள். வெற்றிக் கோட்டை விரைவாக அவர்கள் கடப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றதையே சாதனையாக தான் நினைக்கிறேன்.

இந்திய அணி கேப்டனுக்கு எப்போதுமே நெருக்கடி இருக்கும். இதற்கு முன்பு விளையாடிய உலக கோப்பை தொடரிலும் நெருக்கடி இருந்தது உள்ளது.

கடந்த உலக கோப்பை தொடரில் கேப்டன் ரோகித் சர்மா ஐந்து சதங்களை அடித்தார். அப்போதும் அவருக்கு நெருக்கடி இருந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன். 

ஆனால் இந்த நெருக்கடி ஒரு பிரச்சனையே கிடையாது. உலக கோப்பையை வெல்வதற்கான வழியை இந்திய அணியினர் கண்டறிவார்கள் என்பதில் நான் உறுதியாக நம்புகிறேன் என்று, சவுரவ் கங்குலி தனது கருத்தினை பதிவு செய்துள்ளார்.

கிரிக்கெட் ஜாம்பவான்கள் மட்டும் தான் கணிக்க வேண்டுமா என்ன? இந்த உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் இரு அணிகள் எது என்று உங்கள் கணிப்பை கமெண்டில் தெரிவிங்கள். உங்களின் கணிப்பு எப்படி என்று பார்க்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Which team win this world cup 2023 Dada Gangulys Crazy Prediction


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->