தோனிக்கு பிறகு சிறந்த விக்கெட் கீப்பர் கிடைக்கவில்லை - விராட் கோலி பகீர் பேட்டி.! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணிக்கு சிறந்த விக்கெட் கீப்பர் என்றால் அது மகேந்திரசிங் தோனி தான் என்று, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டி அளித்து அளிப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வருகின்ற 17 ஆம் தேதி டி20 உலகக்கோப்பை போட்டி தொடர் தொடங்க உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கும் இந்த உலக கோப்பை தொடர், வருகின்ற நவம்பர் மாதம் 14ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

நோய்த்தொற்று பரவல் காரணமாக இந்தியாவில் நடக்க இருந்த இந்த டி20 உலக கோப்பை தொடர், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. இதில் முதலில் தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற உள்ளது. அதனை அடுத்து இந்தத் தகுதி சுற்றில் தகுதி பெறும் நான்கு அணிகள் ஏற்கனவே தகுதியான 8 அணிகளுடன் சூப்பர் 12 சுற்றில் பங்கேற்கும்.

இதில், இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் வருகின்ற 24ம் தேதி மோத உள்ளது. இந்நிலையில் டி20 உலக கோப்பை பயிற்சி ஆட்டங்களுக்கான விளம்பரத்தில் விராட் கோலி மற்றும் ரிஷப் பந்த் இடையிலான உரையாடல் காணொளியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த காணொளியின் உரை வடிவம் பின்வருமாறு,

விராட் கோலி : டி20 கிரிக்கெட்டில் சிக்சர்கள் தான் வெற்றியை தரும்.

ரிஷப் பந்த் : கவலை வேண்டாம் நான் தினமும் பயிற்சி செய்கிறேன். ஒரு விக்கெட் கீப்பர் தான் உலககோப்பையில் சிக்சர் அடித்து இந்திய அணி வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். (2011 உலக கோப்பை போட்டியில் தோனி சிக்சர் அடித்ததை ரிஷப் பந்த் குறிப்பிடுகிறார்)

விராட்கோலி : ஆம், அது உண்மைதான். தோனிக்கு பிறகு ஒரு நல்ல விக்கெட் கீப்பர் இந்திய அணிக்கு கிடைக்கவே இல்லை.

ரிஷப் பந்த் : இந்தியாவின் விக்கெட் கீப்பர் நான்தான்.

விராட் கோலி : அணியில் ஏராளமான விக்கெட் கீப்பர்கள் உள்ளார்கள். பயிற்சி ஆட்டங்களில் யார் நன்றாக விளையாடுகிறார்கள் என்று பார்ப்போம்.

இவர்களுக்கு உள்ளான இந்த கலகலப்பான விவாதம் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. மேலும், மகேந்திர சிங் தோனி குறித்து விராட் கோலி உயர்வாக பேசியிருப்பது தோனியின் ரசிகர்கள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதே சமயத்தில் விராட் கோலி மீண்டும் ரிஷப் பந்த் மீது குற்றச்சாட்டை முன் வைக்கிறார் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

virat say about ms dhoni


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->