விராட் கோலி ஏன் 18 என்ற ஜெர்சியை அணிகிறார் தெரியுமா.? அவரே அளித்த விளக்கம்.!
Virat Kohli speech about wear jersey no 18
இந்திய அணியின் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். அதன்படி, களத்தில் பேட்டிங்கில் ஆக்ரோஷமாக செயல்படும் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர்.
கிரிக்கெட்டின் ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலியின் பேட்டிங்குக்கு ரசிகர்கள் உள்ள நிலையில், இவருடைய அழகுக்கு பெண் ரசிகைகள் அதிகமாக உள்ளனர். கிரிக்கெட்டைப் பற்றி தெரியாதவர்கள் கூட விராட் கோலிக்கு ரசிகர்களாக உள்ளனர்.
இதில் விளையாட்டு வீரர்கள் தங்கள் அணியும் ஜெர்சியில் சில குறிப்பிட்ட நம்பருடன் கூடிய ஜெர்சியை அணிந்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது ஜெர்சியில் 18 என்ற எண்ணுடன் அணிந்து வருகிறார்.

இந்த நிலையில் 18 என்ற எண்ணுக்கும், கோலிக்கும் உள்ள சம்பந்தம் குறித்து முதல் முறையாக கோலி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், 18 என்ற எண்ணை நான் தேர்வு செய்யவில்லை. முதன் முதலில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம் பெற்ற போது எனக்கு வழங்கப்பட்ட ஜெர்சியில் 18 என்ற எண் இருந்தது.
அதன் பிறகு 18 என்ற எண் என் வாழ்வில் முக்கிய இடம் பெற்று விட்டது. நான் 2008ல் இந்திய அணிக்காக முதலில் அறிமுகம் ஆன போது அன்றைய தினம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி, என் தந்தை இறந்த தினம் டிசம்பர் 18, என 18 என்ற எண்ணுக்கும் எனக்கும் நிறைய உணர்வு பூர்வ தொடர்பு உண்டாகி விட்டது என விராட் கோலி நெகழ்ச்சியாக பேசியுள்ளார்.
English Summary
Virat Kohli speech about wear jersey no 18