பக்தி பரவசத்தில் சாமி தரிசனம் செய்யும் விராட் கோலி.. வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


இந்திய அணியின் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். அதன்படி, களத்தில் பேட்டிங்கில் ஆக்ரோஷமாக செயல்படும் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர்.

கிரிக்கெட்டின் ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலி சமீப காலமாக சரியாக விளையாடுவதால் மன சோர்வடைந்து காணப்படுகிறார். அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கூட சரியாக விளையாடவில்லை.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 9ம் தேதி தொடங்குகிறது.

இந்த நிலையில் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா சாமி தரிசனம் செய்துள்ளனர். அந்த வகையில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள உஜ்ஜைனி மஹாகலேஸ்வர் கோவிலுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் அவருடைய மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா ஆகியோர் சாமி தரிசனத்திற்காக சென்றுள்ளனர்.

இந்த நிலையில் விராட் கோலி அவரது மனைவி அனுஷ்கா சர்மா பக்தி பரவசத்தில் சாமி தரிசனம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Virat Kohli pray in mahakaleshwar temple video viral


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->