இந்தியாவில் இன்று தனது 50வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் விராட் கோலி.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் இன்று தனது 50 வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி களமிறங்குகிறார்.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில், முதல் 3 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி 2 போட்டிகளிலும், ஆஸ்திரேலியா அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் தொடரை நிர்ணயிக்கும் நான்காவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.

அந்த வகையில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி இன்று (மார்ச் 9-13) அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் தனது 50வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி விளையாட உள்ளார். அதன்படி விராட் கோலி இந்தியாவில் விளையாடி உள்ள 49 போட்டிகளில்  3958 ரன்கள் குவித்துள்ளார்.

மேலும், 13 சதங்களும், 12 அரை சதங்களும் அடித்துள்ளார். இந்தியாவில் விராட் கோலியின் டெஸ்ட் போட்டி சராசரி 58.21 ஆகும். இந்த நிலையில் இன்று 50ஆவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி விளையாடுவதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கூட இன்னும் அரை சதம் கூட அடிக்காததால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். இந்தியாவில் 50வது போட்டியில் விளையாடும் விராட் கோலி ரசிகர்களுக்கு விருந்தளிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Virat Kohli played 50 test match in India today


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->