#IPL2023 : ஐபிஎல் வரலாற்றில் யாரும் தொட முடியாத சாதனையை முறியடித்த விராட் கோலி.!
Virat Kohli is the most IPL centurys
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் இன்றுடன் லீக் போட்டிகள் முடிவடைய உள்ளது. இதில் தற்போது வரை குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
மீதமுள்ள ஒரு இடத்திற்கு மும்பை, பெங்களூர், ராஜஸ்தான் ஆகிய அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அதேபோல், டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் பஞ்சாப் ஆகிய 4 அணிகள் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது.
இந்த நிலையில் இன்று இரவு 7.30 நடைபெறும் நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியில் பெங்களூர் - குஜராத் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் குவித்துள்ளது. இதில் பெங்களூர் அணியில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 61 பந்துகளில் (13 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர்) 101 ரன்கள் குவித்துள்ளார்.

இதன் மூலம் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார். அந்த வகையில் ஐபிஎல் வரலாற்றில் பெங்களூர் அணியின் வீரர் விராட் கோலி 7 சதம் சதமடித்துள்ளார். அடுத்த படியாக கிறிஸ் கெய்ல் 6 சதமடித்துள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியல்
விராட் கோலி - 7 சதங்கள்
கிறிஸ் கெய்ல் - 6 சதங்கள்
பட்லர் - 5 சதங்கள்
கே.எல்.ராகுல் - 4 சதங்கள்
டேவிட் வார்னர் - 4 சதங்கள்
English Summary
Virat Kohli is the most IPL centurys