இது உண்மையல்ல.!! தீயாய் பரவிய வதந்திக்கு விராட் கோலி முற்றுப்புள்ளி.!! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி உலக அளவில் பிரபலமான விளையாட்டு வீரர்களில் பட்டியலில் முன்னிலையில் வகிக்கிறார். கால்பந்தாட்ட வீரர்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோ, லியோனஸ் மெஸ்ஸிக்கு பிறகு உலக அளவில் பிரபலமான விளையாட்டு வீரராக திகழ்கிறார்.

இந்த நிலையில் தான் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவுக்கு அதிகளவில் சம்பளம் வாங்குவதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகி இருந்தது. அதன்படி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவுக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ  ரூ. 26.7 கோடியும், லியோனல் மெஸ்ஸி ரூ. 21.5 கோடியும்,  விராட் கோலி ரூ. 11.45 கோடியும் சம்பளமாக வாங்குவதாக தகவல் வெளியானது

இந்த தகவலை மறுத்துள்ள விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் "வாழ்க்கையில் நான் பெற்ற அனைத்திற்கும் நான் நன்றியுள்ளவனாகவும், கடமைப்பட்டவனாகவும் இருக்கும் அதே வேளையில், எனது சமூக ஊடக வருமானம் குறித்து சுற்றி வரும் செய்திகள் உண்மையல்ல" என வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Virat Kohli denies getting paid for Instagram posts


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->