ஐபிஎல் போட்டிகளுக்காக தோற்றத்தை மாற்றிய விராட் கோலி.. வைரலாகும் புகைப்படம்.!
Virat Kohli changed new hairstyle for IPL 2023
இந்திய அணியின் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். அதன்படி, களத்தில் பேட்டிங்கில் ஆக்ரோஷமாக செயல்படும் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர்.
கிரிக்கெட்டின் ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலி சமீப காலமாக சரியாக விளையாடாமல் மன சோர்வடைந்து காணப்பட்ட நிலையில், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் விராட் கோலி மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் 16வது சீசன் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 31ம் தேதி தொடங்குகிறது. அதன் காரணமாக தற்போது அனைத்து ஐபிஎல் அணிகளும் தயாராகி வருகின்றன.
இந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முக்கிய வீரான விராட் கோலி ஐபிஎல் போட்டிகளுக்காக தனது ஹேர் ஸ்டைலை மாற்றியுள்ளார். தற்போது இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
English Summary
Virat Kohli changed new hairstyle for IPL 2023