விராட் கோலி இந்திய அணி கேப்டனாக இருந்தால் - முன்னாள் பாகிஸ்தான் வீரர் கருத்து! - Seithipunal
Seithipunal


வரும் ஒரு நாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளின் செயல் திறன்களை சார்ந்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் முன்னாள் பாகிஸ்தான் வீரர்.

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில், வரும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை 50 ஓவர் நடைபெற உள்ளது. 

இது தொடரில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை உள்ளிட 10 அணிகள் விளையாட உள்ளன. 

இந்நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளின் செயல் திறன் மற்றும் வீரர்கள் குறித்து முன்னாள் பாகிஸ்தான் வீரர் ரஷீத் லத்தீஃப் பேசியுள்ளார். 

அவர் தெரிவித்திருப்பதாவது, ''ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்தியா பாகிஸ்தான் போன்ற ஆசிய அணிகள் மிடில் ஓவர்களில் வேகமான ஸ்ட்ரைக் ரேட் தேவைப்படும் இடத்தில் தடுமாறுவதாக நான் பார்க்கிறேன். 

சுழற் பந்து வீச்சுக்கு எதிராக ஸ்வீப் ஆடுவதை இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணி வீரர்கள் அஸ்திவரமாக பயன்படுத்தி வருகின்றனர். 

இதே போல் பேட்டிங் ஆர்டரில் இந்திய அணி மிடில் மற்றும் லோயர் ஆர்டரை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருப்பது அணியின் தோல்விக்கு காரணமாக இருக்கலாம். 

புதிதாக வரும் வீரர்கள் தங்களை நிலைநாட்ட முடியாமல் போவதற்கு இதுவே காரணமாக இருக்கும். மேலும் விராட் கோலியை இந்திய அணி கேப்டனாக தொடர செய்ய வேண்டும். 

அவ்வாறு செய்தால் இந்திய அணி உலக கோப்பைக்கு தயாராகிவிடும்'' என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Virat Kohli captain of the Indian team Rashid Latif opinion


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->