ஒரே மைதானத்தில் 3000 ரன்கள் - சாதனை படைத்த விராட் கோலி.! - Seithipunal
Seithipunal


நேற்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு வீரர் விராட்கோலி 47 ரன்கள் எடுத்தார். இந்த மைதானத்தில் ஐ.பி.எல்.போட்டியில் 89 ஆட்டங்களில் ஆடி இருக்கும் இவர் 3,005 ரன்கள் குவித்துள்ளார். 

இதன் மூலம் ஐ.பி.எல். போட்டியில் ஒரே மைதானத்தில் 3 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை விராட்கோலி பெற்றுள்ளார். இவரைத் தொடர்ந்து, ரோகித் சர்மா மும்பை வான்கடே மைதானத்தில் 80 ஆட்டங்களில் 2,295 ரன்கள் எடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார்.

இதற்கு முன்னதாக விராட்கோலி 33 ரன்னை தொட்ட போது ஒட்டு மொத்த 20 ஓவர் போட்டியில் இந்திய மண்ணில் 9 ஆயிரம் ரன் மைல்கல்லை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். இவருக்கு அடுத்த இடத்தில் ரோகித் சர்மா 300 ஆட்டங்களில் விளையாடி 8,008 ரன்கள் எடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

virat kholi create record 3000 run in one stadium


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக மற்றும் தேமுதிக புறக்கணித்துள்ளதற்கு காரணம்?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக மற்றும் தேமுதிக புறக்கணித்துள்ளதற்கு காரணம்?
Seithipunal
--> -->