இந்திய அணியின் தோல்விக்கு இதுதான் காரணம்.. இதுக்காகவா இங்கிலாந்து நாட்டுக்கு போனீங்க: அணில் கும்ப்ளே காட்டம்!
This is the reason for the Indian team defeat Is this why you went to England Anil Kumble lashes out
சர்வதேச டி20 கிரிக்கெட் தரவரிசையில் நம்பர் 1 அணியாக இருக்கும் இந்தியா, இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தடுமாறி வருகிறது. முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இரண்டு தோல்விகளை சந்தித்துள்ள இந்திய அணி ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.
ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி இனி எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும் என்ற கட்டாயத்தில் உள்ளது. இதனால் அடுத்த இரண்டு போட்டிகளுக்கான திட்டங்களை இந்திய அணி தீவிரமாக வகுத்து வருகிறது.
இந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்திய அணியின் தோல்வி குறித்து முன்னாள் இந்திய கேப்டனும் ஜாம்பவான் சுழற்பந்து வீச்சாளருமான அணில் கும்ப்ளே கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இந்திய பேட்ஸ்மேன்கள் இன்னும் அதிக பொறுமையுடனும், பொறுப்புடனும் விளையாடியிருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அணில் கும்ப்ளே, வெற்றிக்கு ஓவருக்கு 10 ரன்கள் தேவைப்பட்டாலும், இந்திய பேட்ஸ்மேன்களில் யாராவது ஒருவர் பொறுப்பை ஏற்று இறுதி வரை களத்தில் நின்றிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் இந்திய வீரர்கள் அனைவரும் அதிரடியாக விளையாட முயற்சித்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்திய பேட்ஸ்மேன்கள் இன்னும் கொஞ்சம் பொறுமையையும், அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியிருக்க வேண்டும். ரன் ரேட் அதிகமாக இருந்ததால் தொடக்கம் முதலே ஆக்ரோஷமான பாதையை தேர்வு செய்தனர். ஆனால் இதனால் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. ஒருவர் மட்டும் பொறுப்புடன் விளையாடி இறுதி வரை களத்தில் நின்றிருந்தால் போட்டியின் முடிவு வேறு மாதிரியாக இருந்திருக்கலாம் என்று கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
அதேபோன்று இந்திய அணியின் பேட்டிங் வரிசை மாற்றத்தையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். அதிரடி ஆல்ரவுண்டரான ஷிவம் துபேவுக்கு முன்னதாக வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணாவை பேட்டிங் செய்ய அனுப்பியது மிகப்பெரிய தவறு என்று அணில் கும்ப்ளே கூறியுள்ளார்.
ஒரு சிறந்த பேட்ஸ்மேனை எப்போதும் அவருக்குரிய இடத்தில்தான் விளையாட வைக்க வேண்டும். தேவையில்லாமல் பேட்டிங் வரிசையில் மாற்றங்களை செய்வது அணியின் திட்டங்களை பாதிக்கும். ஷிவம் துபே போன்ற அதிரடி வீரர் அணியில் இருக்கும்போது, அவருக்கு முன்னதாக ஹர்ஷித் ராணாவை களமிறக்கிய முடிவு சரியானது அல்ல என்று அவர் விமர்சித்துள்ளார்.
மேலும் இந்திய அணியின் பந்துவீச்சு கூட்டணியிலும் தொடர்ந்து மாற்றங்கள் செய்யப்படுவது குறித்து கும்ப்ளே அதிருப்தி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு போட்டியிலும் பந்துவீச்சாளர்களை மாற்றிக்கொண்டே இருப்பதை நிறுத்த வேண்டும் என்றும், வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கினால் மட்டுமே அவர்கள் நம்பிக்கையுடன் செயல்பட முடியும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
தொடரின் முதல் மூன்று போட்டிகளில் இரண்டு தோல்விகளை சந்தித்துள்ள இந்திய அணிக்கு, அடுத்த இரண்டு ஆட்டங்களும் மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளன. இந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும் என்பதால், இந்திய அணியின் பேட்டிங் வரிசை மற்றும் பந்துவீச்சு கூட்டணியில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்த சூழலில், இந்திய வீரர்கள் அதிரடியை மட்டும் நம்பாமல் சூழ்நிலைக்கு ஏற்ப பொறுப்புடன் விளையாட வேண்டும் என்றும், அணியின் பேட்டிங் வரிசையில் தேவையற்ற மாற்றங்களை தவிர்க்க வேண்டும் என்றும் அணில் கும்ப்ளே கூறியிருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
English Summary
This is the reason for the Indian team defeat Is this why you went to England Anil Kumble lashes out