குடை எடுத்துட்டு போங்க...! தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மிதமான மழை...! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது. குறிப்பாக நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,"வட தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டி, தரையிலிருந்து சுமார் 0.9 கிலோமீட்டர் உயரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவி வருகிறது. மேலும், தெலங்கானாவில் இருந்து கர்நாடக கடலோரப்பகுதியை கடந்து மத்திய கிழக்கு அரபிக்கடல் வரை, தரையிலிருந்து சுமார் 1.5 முதல் 3.1 கிலோமீட்டர் உயரம் வரை மற்றொரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நீடித்து வருகிறது.

இன்றைய (10-07-2026) வானிலை:
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், திருப்பத்தூர், திருவள்ளூர், திருவாரூர்,சென்னை, செங்கல்பட்டு, மதுரை, தஞ்சாவூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி,  திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.இதர தமிழக மாவட்டங்களிலும், புதுவை பகுதிகளிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய (11-07-2026) வானிலை:
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. பல மாவட்டங்களில் வறண்ட வானிலையும் நிலவக்கூடும்.

12-07-2026 முதல் 14-07-2026 வரை:
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை தொடரக்கூடும். இதர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலை நிலவரம்:
ஜூலை 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை.ஜூலை 12 முதல் 14 வரை வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது. இருப்பினும், தமிழகத்தின் சில பகுதிகளில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான முன்னறிவிப்பு:
இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸையும் எட்டக்கூடும்.இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Take umbrella and go Moderate rains expected 19 districts Tamil Nadu today


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->