தமிழக யார்க்கர் மன்னன் நடராஜனுக்கு தெலுங்கானாவில் இருந்து பறந்து வந்த வாழ்த்து!.!! - Seithipunal
Seithipunal


இந்திய அணி இம்மாதம் இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.  ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. நவம்பர் 27ஆம் தேதி முதல் ஜனவரி 19-ம் தேதி வரை இந்திய அணி ஆஸ்திரேலியாவில் பயணம் மேற்கொள்கிறது. 

இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை கடந்த கடந்த மாதம் 26 ஆம் தேதி பிசிசிஐ தேர்வுக்குழு அறிவித்தது. ஆனால், இந்த அணியில் இடம்பெற்ற பல்வேறு வீரர்கள் காயம் ஏற்பட்டதை அடுத்து, அணியின் புதிய வீரர்கள் பட்டியலை பிசிசிஐ இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. 

அதன்படி, தமிழக வீரரும், சுழற்பந்துவீச்சாளருமான சக்கரவர்த்தி டி20 அணியில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், தோள்பட்டை காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக தமிழக வேகப்பந்துவீச்சாளர் டி நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார். நடராஜன் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்துவீசி விராட்கோலி, தோனி, ஏபி டிவில்லியர்ஸ் போன்ற முக்கிய வீரர்களின் விக்கெட்டை எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இளைஞர்களுக்கு வழிகாட்டியாக திகழ்கிறார் நடராஜன் என தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். தன்னுடைய திறமையான பந்து வீச்சால் சேலம் சின்னப்பம்பட்டியை சேர்ந்தவர் நடராஜன் அவர்கள், இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வாகியுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவருடைய லட்சியம் நிறைவேறவும், இந்திய அணிக்காக பல சாதனைகள் படைக்கவும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilisai wish for t nadarajan


கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்குAdvertisement

கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்கு
Seithipunal