அனுபவித்து விளையாட தனக்கான இடத்தை தேர்வு செய்தார் சூர்யகுமார் யாதவ் - Seithipunal
Seithipunal


பேட்டிங் ஆர்டரில்  நான்காவது பேட்ஸ்மேனாக களம் இறங்கி விளையாடுவது  சரியானதாக இருக்கும் - சூர்யகுமார் யாதவ்

சூர்யகுமார் யாதவ் எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். 32 வயதாகும் சூர்யகுமார் யாதவ் இந்திய அணி சார்பில் 13 ஒருநாள் மற்றும் 28 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தம் 1151 ரன்களை எடுத்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் 6 அரை சதம் மற்றும் 1 சதம் அடித்துள்ளார். டி20 வடிவ கிரிக்கெட்டில் ஸ்ட்ரைக் ரேட் 173.29 ஆகும். 360°ல் ஆடக் கூடிய வல்லமை படைத்தவர் சூர்யகுமார் யாதவ். 

"எனக்கு எல்லா இடத்திலும் பேட் செய்ய விருப்பம் தான். ஆனால் நான்காவது இடத்தில் விளையாடுவது சரியானதாக இருக்கும் எனவும் அது எனக்கு நல்லதும் கூட என தெரிவிக்கப்பட்டுள்ளார் .

நான் 7 முதல் 15 ஓவர்கள் வரை ரொம்பவே அனுபவித்து கிரிக்கெட் ஆடும் நேரமாகும் . அந்த கட்டத்தில் நான் நேர்மறை எண்ணங்களுடன் இருப்பேன். டி20 கிரிக்கெட்டில் 8 முதல் 14-வது ஓவர் வரையிலான நேரம் ரொம்பவே முக்கியம் என கருதுகிறேன்.

அந்த சமயத்தில் நான் ரிஸ்க் எடுப்பதை தவிர்ப்பேன். கவர் திசைக்கு மேல் பந்தை தட்டிவிட்டு கடினமாக ஓடி ரன் எடுப்பேன். நான்காவது இடத்தில் விளையாடுவது சவாலானதும் கூட என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Suryakumar Yadav chose a place for himself to enjoy and play


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->