சானியா மிர்சாவின் தங்கச்சிக்கு கல்யாணம்!  மாப்பிள்ளை யார் தெரியுமா?! ஷோயிப் மாலிக் சகலையான இந்திய கிரிக்கெட் வீரர்! - Seithipunal
Seithipunal


இந்திய டென்னிஸின் பெண்கள் பிரிவில் நட்சத்திர வீராங்கனையாக இருப்பவர் சானியா மிர்சா. மகப்பேறு காலம் காரணமாக அவர் சில காலமாக விளையாடாமல் இருக்கிறார். தற்போது மீண்டும் விளையாட்டு உலகிற்கு திரும்பியுள்ளார். சமீபத்தில் இந்திய விளையாட்டு வீரர்களை கவுரவப்படுத்தும் இந்தியன் ஹானர்ஸ் அவார்டு விழாவில் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். இந்தியன் ஹானர்ஸ் அவார்டு, இந்தியாவில் சிறந்த விளையாட்டு ஆளுமைகளையும், அந்தந்த விளையாட்டுக்கு அவர்கள் செய்த பங்களிப்பையும் அங்கீகரித்து வழங்கப்பட்டது. 

இந்த விழாவில் கலந்து கொண்ட சானியா அவரது சகோதரி அனாம் இந்த டிசம்பரில் திருமணம் செய்து கொள்வார் என்று தெரிவித்துள்ளார். அனாம் மிர்சா ஒரு பேஷன் ஸ்டைலிஸ்ட் ஆக இருக்கிறார். மணமகன் வேறு யாருமல்ல, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீனின் மகன் முகமம்து அசாதுதின் என்பதையும் அவர் வெளிப்படுத்தினார். முகமது அசாருதீன் சமீபத்தில் ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அவரது மகன் கோவா கிரிக்கெட் அணியில் விளையாடி வருகிறார்.  
 
முகமது அசாதுதீன் கடந்த சீசனில் ரஞ்சி டிராபியின் போது முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமானார். பிறந்தது ஹைதராபாத் என்றாலும் கோவாவுக்காக இரண்டு ஆட்டங்களில் விளையாடினார், ஆனால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. அவர் விளையாடிய மூன்று இன்னிங்ஸ்களிலும், சராசரியாக 5.66 வெறும் 17 ரன்கள் மட்டுமே எடுத்தார். 

இது குறித்து ஆங்கில நாளிதழுக்கு பேசிய சானியா, அசாதுதீன் ஒரு அழகான பையன், “அவர் டிசம்பரில் திருமணம் செய்து கொள்கிறார். பாரிஸில் அவரது பேச்லரேட் பயணத்திலிருந்து நாங்கள் திரும்பி வந்தோம். நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். அவள் ஒரு அழகான பையனை மணக்கிறாள். அவர் முகமது அசாருதீனின் மகனாக இருக்கிறார் என்பதில்  நாங்கள் கூடுதல் மகிழ்ச்சியடைகிறோம்" என கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sania mirza sister marriage with Indian cricketer


கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
Seithipunal