History Repeat; கிங் கோலி அபாரம்; குஜராத்தை வீழ்த்தி 02-வது முறையாக சாம்பியன் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு..! - Seithipunal
Seithipunal


19-வது ஐபிஎல் கோப்பையை 02 வது முறையாக பெங்களூரு அணி வென்று கோப்பையை தட்டித் தூக்கியுள்ளது. நடப்பு சீசன் முழுவதும் அபாரமாக விளையாடிய நடப்பு சாம்பியன் ஆர்சிபியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் இறுதிப்போட்டியில் களமிறங்கின.

இன்று குஜராத்- அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கிய இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சிறப்பான பந்துவீச்சை ஆர்சிபி அணி வீரர்கள் சிறப்பாக வீசி, அணியின் தொடக்க வீரர் கில்லை 10 ரன்னிலும், சுதர்சனை 12 ரன்னிலும் வெளியேற்றினர்.

அடுத்தடுத்து வந்த நிஷாந்த் சிந்து, பட்லர் அனைவரும் பெரிய ரன்களை அடிக்காமல் அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர். இறுதிவரை களத்தில் நின்ற தமிழ்நாடு வீரர் வாஷிங்டன் சுந்தர் 37 பந்தில் 05 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்தார். அதன்படி, குஜராத்தை அணி, 20 ஓவரில் 08 விக்கெட்டை இழந்த வெறும் 155 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பெங்களூரு அணி சார்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய புவனேஷ்வர் குமார் மற்றும் ஜோஷ் ஹசல்வுட் தலா 02 விக்கெட்டுகளும், ரசிக்தர் சலாம் 03 விக்கெட்டுகளும் என மொத்தம் 07 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். 

இரண்டாவது இன்னிங்க்சில் 156 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடி, ஆர்சிபி அணி அபாரமாக ஆடி, இலகுவாக வெற்றி ஈட்டியுள்ளது. ஆட்டத்தில் தொடக்கத்தில் களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். ரன் மெஷின் ஆட்டமிழக்காமல் 42 பந்துக்கு 75 ரன்கள் என அபாரமாக ஆடி வெற்றிக்கு வழி வகுத்தார். 

குஜராத் சார்பில் சிராஜ், றபாடா,அர்ஷத் கான் தலா 02 விக்கெட்டுகளையும், ரஷீத்கான் 02 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இறுதியில் ஆர்.சி.பி. அணி 18 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்து அபார வெற்றிபெற்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Royal Challengers Bangalore Defeat Gujarat to Win Championship for the Second Time


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




சினிமா

Seithipunal
--> -->