ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் Hitman ரோஹித் மற்றும் Aura பாண்டியா; உற்சாகத்தில் ரசிகர்கள்..!
Rohit and Pandya to participate in the ODI series against Afghanistan
இந்திய நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தங்களது உடல்தகுதியை நிரூபித்துள்ளதால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில், பங்கேற்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி, கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்றுள்ளது. ஒரே ஒரு டெஸ்ட் டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஆப்கான் அணி பரிதாப தோல்வியைச் தழுவியுள்ளது.

தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கான 03 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் ஜூன் 13-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த தொடரில், விளையாடுவதற்கு முன்னாள் கேப்டன்கள் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் காயம் காரணமாக விராட் கோலி விலகியுள்ள நிலையில், அவருக்குப் பதிலாக ஜெய்ஸ்வால் சேர்க்கப்பட்டுள்ளார்.
அடுத்ததாக, ரோகித் மற்றும் ஹர்திக் ஆகிய இருவரும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினர். அப்போது சில போட்டிகளில் காயம் காரணமாக இருவரும் விளையாடவில்லை. இந்நிலையில், ஆப்கானுக்கு எதிரான இந்திய அணியில் இவர்கள் இடம்பிடித்திருந்தாலும், உடற்குதியை நிரூபித்தால் மட்டுமே தொடரில் விளையாட முடியும் என பிசிசிஐ ஏற்கனவே தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ஹர்திக் பாண்டியா விளையாடுவது உறுதியாகியுள்ளது. அவர் பெங்களூருவில் உள்ள பிசிசிஐ மையத்தில் உடல் தகுதிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். அதற்காக வலைப்பயிற்சியில், 10 ஓவர்களை முழுமையாக வீசிப் பார்த்தார். உடல் தகுதி தொடர்பான அனைத்துச் சோதனைகளிலும் அவர் தேர்ச்சி பெற்றுள்ளார் என பிசிசிஐ வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. ஆனாலும், அவர் நேரடியாகத் தர்மசாலா செல்வாரா அல்லது சண்டிகர் முகாமில் இணைவாரா என்பது இன்னும் தெரியவில்லை.

இருப்பினும், அணியில் அவரது இணைவு தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், ரோகித் சர்மாவும் உடல் தகுதிச் சான்றிதழைப் பெற்றுள்ளார். தொடை தசைப் பிடிப்பு தொடர்பான பரிசோதனைக்காக அவர் பெங்களூருவில் உள்ள பிசிசிஐ மையத்தில் தங்கி, உடல்தகுதியை நிரூபித்துள்ளார். இருவரும் அணிக்குத் திரும்பியுள்ள நிலையில், ரசிகர்களுக்கு மிகவும் உற்சாகம் அடைந்துள்ளனர்.
English Summary
Rohit and Pandya to participate in the ODI series against Afghanistan