இந்திய கிரிக்கெட் அணியின் மாற்றங்கள்.? ரோகித் சர்மா மற்றும் டிராவிட் பேட்டி.!! - Seithipunal
Seithipunal


இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் இன்று தொடங்குகிறது. டி20 ஓவர் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் பதிவிலிருந்து விராட் கோலி விலகினார். இதையடுத்து டி20 அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், புதிய தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய தலைமையின் கீழ் இந்திய அணி இன்று தனது முதல் போட்டியில் விளையாட உள்ளது. 

இந்நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் காணொலி காட்சி வாயிலாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியதாவது, இது கடினமான காலம். அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரருக்கும் சரியான ஓய்வு இருப்பது அவசியம். உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் வீரர்களை மதிக்க வேண்டும். வீரர்கள் அவர்களுக்கு தேவையான ஓய்வை எடுத்துக் கொள்கிறார்களா என்பதை நான் உறுதி செய்ய வேண்டும். 

டெஸ்ட், ஒருநாள், டி20 என ஒவ்வொருவருக்கும்  ஒவ்வொரு ஃபார்மெட்டுக்கும் ஒவ்வொரு அணியை தயார் செய்வது எனது திட்டம் இல்லை. அனைத்து பார்மெட் கிரிக்கெட்டும் முக்கியமானதுதான். அடுத்து ஐசிசி தொடரும் வரவுள்ள நிலையில், அதற்காக தயார் செய்து கொள்வது அவசியமாகிறது. அணியை பொறுத்தவரை ஒட்டுமொத்தமாக முன்னேற்றம் தேவை. கிரிக்கெட் விளையாட்டில் பணி சுமை, மேலாண்மை மிக முக்கியமானது. 

நமது வீரர்கள் பிட்டாக இருக்க என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்ய வேண்டும். அதற்கு ஏற்றவாறு திட்டமிடுதல் வேண்டும். இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த தொடரில் சிறப்பாக விளையாட வேண்டும் என தெரிவித்துள்ளார். 

கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது, இந்திய அணி வீரர்கள் பயமின்றி ஆடலாம். ஒரு அணியில் ஆல் ரவுண்டர் பங்கு மிக முக்கியமானது. தேவைக்கு ஏற்ப ஒவ்வொரு வீரரும் அவர்களது பொறுப்புகளையும் மாற்றிக்கொள்ள வேண்டும். விராட் கோலி மிக முக்கியமான வீரர். அவர் அணிக்கு திரும்பும் நேரம், இந்திய அணிக்கு கூடுதல் பலம் சேரும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rohit and dravid press meet


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->