#BREAKING: அதிரடி ஆட்டம்! பெங்களூர் அணி 163 ரன்கள் சேர்ப்பு! - Seithipunal
Seithipunal


நேற்று முன்தினம் தொடங்கிய 13வது ஐபிஎல் தொடரின் மூன்றாவது போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்ச் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ஆடி வருகின்றன. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.

அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள், ஆரோன் பின்ச் - தேவ்தத் படிக்கல் ஜோடி நிதானமாகவும், அதே சமயத்தில் அதிரடியாகவும் ஆடினர்.

தேவ்தத் படிக்கல் 42 பந்துகளில் 8 ஃபோர் அடித்து 56 ரன்கள் எடுத்து போது, விஜய் சங்கர் பந்துவீச்சில் தனது விக்கெட்டை இழந்தார். இதேபோல் மறுமுனையில் ஆடிவந்த ஆரோன் பின்ச் 29 ரன்கள் எடுத்திருந்தபோது, அபிஷேக் சர்மா பந்தில் தனது விக்கெட்டை இழந்தார்.

அடுத்து களமிறங்கிய விராட் கோலி 14 ரன்களுக்கு விக்கெட் ஆனார். 20 ஓவர் முடிவில் பெங்களூர் அணி  5 விக்கெட் இழப்புக்கு, 163 ரன்கள் எடுத்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RCB vs SRH first half


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->