'யஷஸ்வி ஜெய்ஸ்வால் வேறொரு ஐபிஎல் அணிக்காக விளையாட வேண்டும்': காரணத்தை அடுக்கிய முன்னாள் சி.எஸ்.கே வீரர்..!
Rayudu opines that Yashasvi Jaiswal should play for a different IPL team
24 வயதான யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டிலும், அணியில் தொடக்க ஆட்டக்காரராகவும், மும்பை அணிக்காக உள்ளூர் கிரிக்கெட்டிலும், ஐபிஎல் கிரிக்கெட்டில் கடந்த 2020 சீசன் முதல் ராஜஸ்தான் அணிக்காகவும் விளையாடி வருகிறார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஜெய்ஸ்வால் 82 ஆட்டங்களில் விளையாடி 2,592 ரன்களை எடுத்துள்ளார். இதில் 02 சதம், 18 அரைசதம் அடங்கும். நடப்பு ஐபிஎல் சீசனில் 15 இன்னிங்ஸில் 426 ரன்கள் எடுத்துள்ளார். இந்நிலையில், ஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் வேறொரு ஐபிஎல் அணிக்காக விளையாட வேண்டும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் நேரம் மற்றும் சிஎஸ்கே வீரர் அம்பதி ராயுடு தெரிவித்துள்ளார்.

அதாவது, தன்னை பொறுத்தவரை ஜெய்ஸ்வால் தனது ஐபிஎல் அணியை மாற்ற வேண்டும் என்றும், ஒவ்வொரு முறையும் வைபவ் சூர்யவன்ஷியின் பிம்பத்தில் அவர் மறைந்து விடுகிறார். ஜெய்ஸ்வால் ஒரு நட்சத்திர வீரர். அவர் வேறொரு அணிக்கு சென்றால் தனது ஆட்டத்திறன் மூலம் அணியின் வெற்றிக்கு உதவுவார் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஜெய்ஸ்வாலுக்கு இந்த வாய்ப்பும், தளமும் மிக அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார். ஏனெனில், அந்த இளம் வீரரின் (வைபவ் சூரியவன்ஷி) பிம்பத்தின் முன்பு யாராக இருந்தாலும் மறைய கூடும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதனால் அவருடன் சீனியர் வீரர் ஒருவர் இன்னிங்ஸை தொடங்கலாம் என்றும், ஜெய்ஸ்வாலுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி சரியான தேர்வாக இருக்கும் என்று ராயுடு தெரிவித்துள்ளார்.
English Summary
Rayudu opines that Yashasvi Jaiswal should play for a different IPL team