ஐஎம்டிபி இணையதளத்தில் 'மோஸ்ட் பாப்புலர்' நட்சத்திரமாக மாறிய 14 வயது இளம் நடிகர்; 04- இடத்தில் முதல்வர் விஜய்..!
14 Year Old Young Actor Yudhveer Ahlawat Becomes the Most Popular Star on IMDb
நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிப் பாராட்டுகளைப் பெற்று வரும் 'Kartavya' என்ற திரைப்படத்தில் நடித்துள்ள இளம் நடிகர் Yudhvir Ahlawat இந்த வாரத்திற்கான ஐஎம்டிபி பிரபலங்களின் இந்தியப் பட்டியலில் ஷாருக்கான், விஜய், ஜே.ஆர்.என்டிஆர், ஐஸ்வர்யா ராய் போன்ற முன்னணி உச்ச நட்சத்திரங்களைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளார்.
ஐஎம்டிபி இணையதளம், உலகெங்கிலும் உள்ள சுமார் 25 கோடிக்கும் அதிகமான பயனர்கள் எந்தெந்த திரைப்பிரபலங்களின் பக்கங்களை (Profiles) அதிகம் தேடிப் பார்க்கிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டு வாரந்தோறும் மிகவும் பிரபலமான இந்திய நட்சத்திரங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இந்த வாரம் வெளியிடப்பட்ட டாப்-30 பட்டியலில், யாரும் எதிர்பாராத விதமாக இளம் நடிகர் Yudhvir Ahlawat முதலிடத்தைப் பிடித்து ஒட்டுமொத்தத் திரையுலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
கடந்த மே 15 அன்று நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியான 'கர்தவ்யா' திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் சையஃப் அலி கானுடன் இணைந்து யுத்வீர் அஹ்லாவத் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஒரு கொலைச் சம்பவத்தில் சிக்கும் 14 வயது சிறுவனாகவும், அவனைப் பாதுகாக்கும் காவல்துறை அதிகாரியாக சையஃப் அலி கானும் இந்த படத்தில் நடித்துள்ளனர். இதில் சிறுவனாக நடித்த யுத்வீரின் எதார்த்தமான நடிப்பு விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

இதன் காரணமாக, உலகெங்கிலும் உள்ள சினிமா ரசிகர்கள் இந்த இளம் நடிகர் யார் என்பதைத் தெரிந்துகொள்ள அவரது ஐஎம்டிபி பக்கத்தை லட்சக்கணக்கில் தேடியுள்ளனர்.
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த யுத்வீர் அஹ்லாவத், கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான 'Saand Ki Aankh' என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தைத் தொடங்கினார். அதன் பின்னர் அதனைத் தொடர்ந்து 'Love Hostel' திரைப்படம் மற்றும் 'Co-Ed' என்ற தொடரிலும் நடித்துள்ளார்.
கேன்ஸ் திரைப்பட விழாவிற்குச் ஐஸ்வர்யா ராய் சென்ற நிலையில், இந்தப் பட்டியலில் 03-வது இடத்திலும், தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற நடிகர் விஜய் 04-வது இடத்திலும், ஜூனியர் என்.டி.ஆர் 24-வது இடத்திலும் உள்ளனர். பாலிவுட்டின் முன்னணி சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் இந்த வாரம் டாப்-30 பட்டியலிலேயே இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
14 Year Old Young Actor Yudhveer Ahlawat Becomes the Most Popular Star on IMDb