இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் முக்கிய வீரர்களுக்கு வாய்ப்பு இல்லை.!! - Seithipunal
Seithipunal


இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 25-ஆம் தேதி தொடங்குகிறது. டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வருகின்ற 25 ஆம் தேதி தொடங்கி மார்ச் 1ஆம் தேதி வரை பெங்களூரில் நடைபெறுகிறது. 

இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் இஷாந்த் ஷர்மா, விருத்திமான் சாஹா, ரஹானே மற்றும் புஜாரா ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்படாது என பிசிசிஐ தகவல் தெரிவித்துள்ளது. இந்த தொடரில் தேர்வாளர்கள் சில புதிய வீரர்களை களமிறக்க விரும்புகிறார்கள்.

பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் அணி நிர்வாகத்தின் மற்ற மூத்த உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐயின் உயரதிகாரி தெரிவித்துள்ளார் இடமில்லை என்பதால் தேர்வாளர்கள் தனித்தனியாக நான்கு பேரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனினும் ரஞ்சி டிராபியில் அவர்களது செயல் திறனைப் பொறுத்து புஜாரா மற்றும் ரஹானேவுக்கு இந்திய அணியில் மீண்டும் வாய்ப்பு  கிடைக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. ஆனால் இஷாந்த் ஷர்மா மற்றும் விருத்திமான் சாஹா எதிர்காலத்தில் இந்திய அணிக்கு தேர்வு செய்ய பரிசீலிக்கப்பட மாட்டார்கள் என பிசிசிஐ தகவல் தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rahane lshant sharma saha pujara will not be selected for indian team


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->