லக்னோவுக்கு Luck நோ; பிரியான்ஷ் ஆர்யா மற்றும் கூப்பர் கான்னொலி சூப்பர் ஆட்டம்; 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்ற பஞ்சாப்..! - Seithipunal
Seithipunal


19வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 2026 தொடரின் 29-வது லீக் ஆட்டம், முல்லன்பூரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றுப்பெற்றுள்ளது. 

ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னோ கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் பிரியான்ஷ் ஆர்யா மற்றும் கூப்பர் கான்னொலி ஆகியோர் லக்னோ அணியினர் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். தொடக்க ஆட்டக்காரர் பிரியான்ஷ் ஆர்யா வெறும் 37 பந்துகளில் 93 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 03 வது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த கூப்பர் கான்னொலி 46 பந்துகளில் 87 ரன்கள் விளாசி எதிரணியை திணறடித்தார்.

இவர்களின் அதிரடி ஆட்டத்தால் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 07 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது.

மறுமுனையில் 255 ரன்கள் என்ற பெரிய வெற்றி இலக்கை நோக்கி ஆடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் மிச்செல் மார்ச் (40), ஆயுஷ் படோனி (35) இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.  எனினும் பஞ்சாப் அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அணி வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். முடிவில் 20 ஓவர்கள் முடிவில் 05 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் மட்டுமே லக்னோ அணியால் எடுக்க முடிந்தது.

இதன்காரணமாக பஞ்சாப் கிங்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் தனது முதலிடத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. அத்துடன், நடைபெற்ற இந்தப் போட்டியில், பஞ்சாப் அணி இந்த சீசனின் மிக அதிக ஸ்கோரைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளதோடு, ஐபிஎல் வரலாற்றில் ஒரு ஒரு அணி தொடந்து 06 போட்டிகளில் முதலில் வெற்றிபெற்ற அணி என்ற சாதனையையும் படைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Punjab defeats Lucknow by 54 runs


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?


செய்திகள்



Seithipunal
--> -->