பி.டி. உஷா வெறும் நடிப்பு மட்டுமே - மனம் திறந்த வினேஷ் போகத்! - Seithipunal
Seithipunal


பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில், மல்யுத்த போட்டியின் இறுதி சுற்றுக்கு இந்திய வீராங்கனை வினேஷ் போகத் முன்னேறிய போது,100 கிராம் எடை கூடுதலாக இருப்பதாக கூறி அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் மனமுடைந்த அவர் மல்யுத்தப் போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார். 

இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 
தொடர்ந்து, அரியானாவில் அடுத்த மாதம்  நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஜுலானா சட்டமன்ற தொகுதியில் வினேஷ் போகத் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், பாரீசில் என்ன நடந்தது என்பது குறித்து வினேஷ் போகத் பேட்டி அளித்துள்ளார். அதில், பாரீஸ் நகரில் எனக்கு என்ன ஆதரவு கிடைத்தது என தெரியவில்லை என்று கூறியுள்ளார். 
மேலும், பி.டி. உஷா என்னை சந்தித்தார். அப்போது ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டார். அரசியலில் பூட்டிய கதவுக்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதே போல் பாரீசிலும் அரசியல் நடந்ததாகவும், இதனால் எனது மனம் உடைந்ததாக தெரிவித்துள்ள அவர், மல்யுத்தத்தை விட வேண்டாம் என பலர் கூறினர். ஆனால், எதற்காக நான் அதனை தொடர வேண்டும். அனைத்து இடங்களிலும் அரசியல் உள்ளது என்று தெரிவித்துள்ளார். 

நான் மருத்துவமனையில் இருந்தபோது வாழ்க்கையில் கடினமான கட்டத்தை கடந்து கொண்டு இருந்தேன். அப்போது, எனக்கு ஆதரவு தருவதுபோல் உலகத்திற்கு காட்டுவதற்காக, பி.டி. உஷா என்னிடம் அனுமதி கேட்காமல் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்து, நான் உங்களுடன் இருக்கிறேன் என்று தெரிவித்தது  வெறும் நடிப்பு மட்டுமே என்று கூறியுள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

P.T Usha is just an act open minded Vinesh Phogat


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->