தோனியுடன் ஒரே அணியில் விளையாடுவது…தோனியுடன் காலை உணவு, பயிற்சி…இது என் கனவு!” – சஞ்சு சாம்சன் நெகிழ்ச்சி - Seithipunal
Seithipunal


2026 ஐபிஎல் தொடரை முன்னிட்டு நடந்த டிரேடிங் சாளரத்தில் மிகப் பெரிய அதிரடி மாற்றமாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனை 18 கோடி ரூபாய்க்கு தங்கள் அணியில் சேர்த்தது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த டீலில் சிஎஸ்கே அணியின் முக்கிய ஆல்–ரௌண்டர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் இருவரும் ராஜஸ்தான் அணிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தன்னை சிஎஸ்கே அணியில் சேர்த்திருப்பது குறித்து முதன்முறையாக நெகிழ்ச்சியுடன் கருத்து கூறியுள்ளார் இந்திய அணியின் விக்கெட் கீப்பர்–பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன்.

சிஎஸ்கேவில் சேர்ந்து விளையாட இருக்கிறார் என்ற செய்தி வெளிவந்ததுமே, சஞ்சு சாம்சன் அளித்த இந்த கருத்து ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது.

அவர் கூறியதாவது:“சி.எஸ்.கே அணியில் இருக்கும் ஒரு நபர் பற்றி எல்லோருக்கும் தெரியும் — அவர் எம்.எஸ். தோனி. இந்திய அணியில் முதல்முறையாக 19 வயதில் தேர்வு செய்யப்பட்டபோது, நாங்கள் 10–20 நாட்கள் ஒன்றாக இருந்தோம். அப்போது அவர் கேப்டனாக இருந்தார். அதன் பிறகு தோனியை பெரும்பாலும் ஐபிஎலில் மட்டுமே பார்க்க முடிந்தது.”

“ஐபிஎல் மைதானங்களில் தோனியை சந்திக்க வேண்டுமென்றே எண்ணியிருக்கிறேன். ஆனால் அவரைச் சுற்றி எப்போதும் ஐந்து–பத்து பேர் இருப்பார்கள். அதனால் நான் அவரை தனியாகச் சந்திக்க முடியவில்லை. நான் எதிர்பார்த்த அந்த ‘தனிப்பட்ட தருணத்தை’ விதி இப்போது எனக்கு கொடுத்திருக்கிறது.”

“அடுத்த ஐபிஎல் தொடரில் இரண்டு மாதம் தோனியுடன் ஒரே அணியில் விளையாட இருப்பதை நினைத்தாலே செம எக்ஸைட்மென்ட். காலை உணவு கூட அவருடன் ஒரு மேசையில் அமர்ந்தே இருக்கும். பயிற்சி மைதானம், டிரெசிங் ரூம், போட்டி நேரம்—எல்லாதிலும் தோனியுடன் இருக்க போகிறேன் என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.”

சிஎஸ்கே ஜெர்சியை முதல்முறையாக அணிந்தபோது ஏற்பட்ட உணர்வையும் அவர் பகிர்ந்துள்ளார்:“மஞ்சள் நிற ஜெர்சி அணிந்தவுடன்… நான் ஏற்கனவே ஒரு சாம்பியனாகிவிட்டேன் என்று உணர்ந்தேன். இது எனக்குப் பெரும் பெருமை.”

சாம்சன் வரவு சிஎஸ்கே அணியின் பேட்டிங் மற்றும் கேப்டன்சி லைனில் ஒரு பெரிய பலமாகவே பார்க்கப்படுகிறது.
மாற்றாக, ஜடேஜா ராஜஸ்தானுக்கு செல்லும் மாற்றம் அந்த அணியின் சமநிலையையும் வலுப்படுத்தும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

2026 ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும்முன்பே இப்படியான பெரிய டிரேடுகள் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Playing in the same team with Dhoni having breakfast with Dhoni training this is my dream Sanju Samson


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->