மூன்று கிரிக்கெட் வீரருக்கு கொரோனா தொற்று உறுதி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் உள்ளிட்ட கிரிக்கெட் போட்டிகளிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் சில நாடுகளில் பார்வையாளர்கள் இன்றி உள்ளூர் போட்டிகள் மட்டும் நடத்தப்பட்டது. 

இதையடுத்து சர்வதேச போட்டிகளிலும் பார்வையாளர்கள் இன்றி நடத்த ஐசிசி முடிவு செய்து. அதன்படி ஏற்கனவே திட்டமிடப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட இங்கிலாந்து - பாகிஸ்தான் போட்டிக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. 3 டெஸ்ட், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடருக்காக பாகிஸ்தான் அணி நாளை இங்கிலாந்து புறப்பட உள்ளது. 

இந்நிலையில் இங்கிலாந்து செல்லும் பாகிஸ்தான் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்ற நிலையில், அனைத்து வீரர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ஷாதப் கான், ஹைதர் அலி, ஹரிஷ் ராஃப் ஆகிய மூன்று வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதையடுத்து மூன்று வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pakistan 3 cricket players corona test in positive


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal