தாண்டவம் ஆடிய நியூசிலாந்து அணிக்கு., ருத்ர தாண்டவம் ஆடி காட்டிய நம்ம தோனி.!! என்னை மிஞ்ச ஆள் இருக்கா என்ன?!! மீண்டும் சாதனை.!!! - Seithipunal
Seithipunal


மின்னல் வேகத்தில் தோனி ஸ்டெம்பிங் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

இந்தியா நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது, மற்றும் கடைசி டி20 போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் ஆட்டக்காரராக களமிறங்கிய டிம் சேபெர்ட் 25 பந்துகளில் 3 சிக்ஸர், 3 போர் என அதிரடியாக ஆடி 43 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். 

மற்றும் ஒரு தொடக்க ஆட்டக்காரரான கொலின் முன்றோ (Colin Munro) எடுத்த எடுப்பிலேயே தனது அதிரடி ஆட்டத்தை காட்டினார். பந்துகள் நான்கு புறமும் பறந்தன. முடிந்தவரை இந்திய பந்து வீச்சாளர்களும் விக்கெட்டை கைப்பற்றும் முனைப்பில் தங்களது முழு திறமையும் காட்டி பந்துவீசினர்.

அதிரடியாக ஆடிய முன்ரோ 40 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்து குல்தீப் பந்தில் வெளியேறினார். அடுத்து இறங்கிய கேப்டன் வில்லியம்சன் 27 ரன்னில் ஆட்டமிழந்தார். கிராண்ட்ஹோம் 30 ரன்னில் அவுட்டானார்.

இறுதியில், நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்துள்ளது. மிச்செல் 19 ரன்னுடனும், டெய்லர் 14 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்திய பந்து வீச்சில் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், கலீல் அகமது, புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து, இந்தியாவிற்கு 213 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு, களமிறங்கிய இந்திய அணி இலக்கை எட்ட முடியாமல் 4 போராடி தோற்றது. இந்த போட்டியில் தமிழக வீரர்கள் விஜய் சங்கர் 43 ரன்களும், தினேஷ் கார்த்திக் 33 ரன்கள் எடுத்தும் அசத்தியுள்ளனர்.

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸின் 7.4-வது ஓவரில் தனது மின்னல் வேக ஸ்டெம்பிங்கால் டிம் செய்பெர்ட்டை மகேந்திர சிங் தோனி அவர்கள் அவுட்டாக்கி வெளியேற்றினார். இதன் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  கடந்த சில ஆண்டுகளாக உலக அளவில் சிறந்த பந்து காப்பாளர் (விக்கெட் கீப்பர்) என்றால் அது தோனி தான் என்று சொல்லும் அளவிற்கு பல முறை மின்னல் வேக ஸ்டம்பிங்கை எடுத்து நிரூபித்துள்ளார். 




இதனை யாரும் மறுக்க முடியாது. என்ன தான் இன்றய போட்டியில் நியூசிலாந்து அணி வீரர்கள் தாண்டவம் ஆடி வெற்றி பெற்றாலும், அவர்களுக்கு தனது ருத்ர தாண்டவத்தை காட்டி மிரட்டியுள்ளார் நம்ம தல தோனி. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MS DHONI FAST STAMPING


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->