“படம் பிடிக்கவில்லை என்றால் நடுரோட்டில் மொட்டை அடித்துக்கொள்கிறேன்” – நடிகை ஸ்வேதா லக்‌ஷ்மன் அதிரடி சவால்! - Seithipunal
Seithipunal


பெரிய நட்சத்திரங்கள், கோடிக்கணக்கான பட்ஜெட் இல்லாமலேயே நல்ல கதை மற்றும் தரமான கண்டென்ட் இருந்தால் ஒரு திரைப்படம் ரசிகர்களை கவர முடியும் என்ற நம்பிக்கையுடன் களமிறங்கியுள்ளார் இளம் நடிகை ஸ்வேதா லக்‌ஷ்மன்.

சஹ: லைஃப் ஆஃப் சஞ்சு திரைப்படம் செப்டம்பர் 4-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ஸ்வேதா லக்‌ஷ்மன் பேசியது கவனம் பெற்றுள்ளது.

படம் குறித்து பேசிய அவர், பெரிய பட்ஜெட்டோ, முன்னணி நட்சத்திரங்களின் கூட்டணியோ தங்களிடம் இல்லாவிட்டாலும், கதையின் மீது மிகுந்த நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார். இது வழக்கமான காதல் கதையாக இருக்காது என்றும், காதலுக்குப் பின்னால் இருக்கும் வலி, தியாகம் மற்றும் ஆழமான உணர்வுகளைப் படம் பேசும் என்றும் கூறினார்.

மேலும், திரைப்படத்தின் மீதான தனது நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் ரசிகர்களுக்கு சவால் விடுத்த ஸ்வேதா லக்‌ஷ்மன், படம் பார்த்த பிறகு ஏமாற்றம் ஏற்பட்டால் “நான் நடுரோட்டில் நின்று மொட்டை அடித்துக்கொள்கிறேன்” என்று அதிரடியாக தெரிவித்துள்ளார். அவரது இந்தப் பேச்சு டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாகியுள்ளது.

இந்தப் படம் தங்களுக்கு ஒரு திரைப்படம் மட்டுமல்ல என்றும், இதன் பின்னால் பணியாற்றிய சுமார் 50 முதல் 60 புதிய திறமையாளர்களின் உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் கனவு இருப்பதாகவும் ஸ்வேதா கூறியுள்ளார்.

நிஷாந்த் தோத்தி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஷேகர் சந்திரா இசையமைத்துள்ளார். குமார் காசரம், ஸ்வேதா லக்‌ஷ்மன், ப்ரக்ஞா பாண்டியா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை தேஜா வெல்புச்செர்லா தயாரித்துள்ளார். ‘சஹ: லைஃப் ஆஃப் சஞ்சு’ செப்டம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

If you donot like the movie I will shave my head in the middle of the road Actress Swetha Lakshman bold challenge


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



Seithipunal
--> -->