“வேலையையும் தாய்மையையும் சமமாக கொண்டு செல்வது எளிதல்ல”!என் மகன்கள்தான் எனது பலம்! மனம் திறந்த நயன்தாரா! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நயன்தாரா. இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர், தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயாகவும், தொடர்ந்து சினிமாவில் பிஸியான நடிகையாகவும் இருந்து வருகிறார்.

‘ஐயா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நயன்தாரா, ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘சந்திரமுகி’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த அவர், ஹிட் படங்களின் மூலம் தனக்கென தனி மார்க்கெட்டை உருவாக்கினார்.

திரைப்பயணத்தில் ஏற்பட்ட காதல் முறிவுகளுக்குப் பிறகு, சிறிது காலம் இடைவெளி எடுத்த நயன்தாரா, ‘நானும் ரௌடிதான்’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் கவனம் பெற்றார். இப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் ஏற்பட்ட காதல் பின்னர் திருமணத்தில் முடிந்தது. திருமணத்துக்குப் பிறகு வாடகைத் தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயானார் நயன்தாரா.

குழந்தைகள் பிறந்தது தொடர்பாக அப்போது பல்வேறு சர்ச்சைகள் எழுந்தாலும், அரசு தரப்பில் நடைபெற்ற விசாரணையில் விதிமுறைகளுக்கு உட்பட்டே அனைத்தும் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த விவகாரம் முடிவுக்கு வந்தது.

குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தாலும், நயன்தாரா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவரது நடிப்பில் ‘டாக்சிக்’ மற்றும் ‘ஹாய்’ ஆகிய திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது குழந்தைகள் மற்றும் தாய்மை குறித்து நயன்தாரா மனம் திறந்து பேசியுள்ளார். அப்போது, வேலையையும் தாய்மையையும் ஒரே நேரத்தில் சமநிலைப்படுத்துவது எளிதான விஷயம் அல்ல என்று அவர் தெரிவித்துள்ளார்.

தனது மகன்களான உயிர் மற்றும் உலக் தனக்கு மிகப்பெரிய பலமாக இருப்பதாகவும், அவர்களுடன் அதிக நேரத்தை செலவிடும் வகையில் தனது வேலைகளை திட்டமிட்டு வருவதாகவும் நயன்தாரா கூறியுள்ளார். குடும்பத்தின் ஆதரவும் தனக்கு மிகவும் முக்கியமானது என்று குறிப்பிட்ட அவர், குழந்தைகளுடன் இருக்கும்போது முழுமையாக அவர்களுடன் மட்டுமே இருப்பதை உறுதி செய்வதாக தெரிவித்துள்ளார்.

தனது குழந்தைகளுடன் செலவிடும் நேரமே மனதளவில் தன்னை நிலையாக வைத்திருக்க உதவுவதாகவும் நயன்தாரா கூறியுள்ளார். நடிப்புத் தொழிலையும் தாய்மையையும் சமநிலைப்படுத்துவது சவாலாக இருந்தாலும், தனது குழந்தைகள் தனக்கு அளிக்கும் பலத்தால் அதை சமாளித்து வருவதாக அவர் தெரிவித்திருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Balancing work and motherhood is not easy My sons are my strength Nayanthara opens up


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



Seithipunal
--> -->