டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த கார்... கோர விபத்தில் 3 கல்லூரி மாணவர்கள் பரிதாப பலி..! - Seithipunal
Seithipunal


சென்னை அருகே தனியார் கல்லூரியை சேர்ந்த 7 மாணவர்கள் காரில் புதுச்சேரி சென்று விட்டு, மீண்டும் சென்னை நோக்கி திரும்பியபோது நிகழ்ந்த கோர விபத்தில் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் 4 மாணவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.சென்னை அருகே செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியை சேர்ந்த 7 மாணவர்கள் நேற்று காரில் புதுச்சேரிக்கு சென்றனர். அங்கு தங்களது பயணத்தை முடித்துக் கொண்டு, அதே காரில் சென்னை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர்.

செங்கல்பட்டு அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக காரின் டயர் திடீரென வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் தாறுமாறாக ஓடி தூக்கி வீசப்பட்டது.

இந்த பயங்கர விபத்தில் காரில் பயணம் செய்த 3 கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 4 மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். விபத்தை அறிந்ததும் அப்பகுதியினர் விரைந்து சென்று காயமடைந்த மாணவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து காரணமாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் மற்றும் உயிரிழந்த மாணவர்கள் குறித்த விவரங்களை விசாரணை செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

3 college students tragically die car accident after tire bursts and car loses control


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




சினிமா

Seithipunal
--> -->