ஒரே நாளில் ரூ.2,360 சரிவு... தங்கம் விலை இன்று எவ்வளவு தெரியுமா...? - Seithipunal
Seithipunal


தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்த நிலையில், இன்று சென்னையில் தங்கம் விலை திடீரென சரிந்துள்ளது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,360 குறைந்ததால், நகை வாங்க திட்டமிட்டுள்ள பொதுமக்கள் மத்தியில் இந்த விலை மாற்றம் கவனம் பெற்றுள்ளது.

சென்னையில் நேற்று முன்தினம் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.14,725-க்கும், ஒரு சவரன் ரூ.1,17,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று காலை தங்கத்தின் விலை மேலும் குறைந்தது. கிராமுக்கு ரூ.75 குறைந்து ரூ.14,650-க்கும், சவரனுக்கு ரூ.600 குறைந்து ரூ.1,17,200-க்கும் விற்பனையானது.

ஆனால், மாலையில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்து அதிர்ச்சி அளித்தது. கிராமுக்கு ரூ.150 அதிகரித்து ரூ.14,800-க்கும், சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து ரூ.1,18,400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.நேற்று மாலை உயர்ந்த தங்கம் விலை, இன்று எதிர்பாராத வகையில் மீண்டும் சரிந்துள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,360 குறைந்து ரூ.1,16,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஒரு கிராம் தங்கத்தின் விலையும் ரூ.295 குறைந்து ரூ.14,505-க்கு விற்பனை செய்யப்படுகிறது.தங்கத்தின் விலை மட்டுமின்றி வெள்ளி விலையிலும் இன்று சரிவு ஏற்பட்டுள்ளது.

ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.260-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.5 ஆயிரம் குறைந்து ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.தங்கம், வெள்ளி என இரு விலைமதிப்புமிக்க உலோகங்களின் விலையும் ஒரே நாளில் குறைந்திருப்பது, வாங்கும் முடிவில் இருப்பவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

2360 fell single day Do you know what price gold today


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




சினிமா

Seithipunal
--> -->