ரசிகரிடம் கொடுத்த பொருளை திருப்பிக் கேட்ட தல தோனி - வைரலாகும் வீடியோ.!
ms dhoni ask choclate to fans in america
ரசிகரிடம் கொடுத்த பொருளை திருப்பிக் கேட்ட தல தோனி - வைரலாகும் வீடியோ.!
சமீபத்தில் அமெரிக்காவிற்குச் சென்றிருந்த இந்திய கிரிக்கெட் வீரர் தோனி நியூயார்க் நகரில் நடைபெற்ற யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் கால்இறுதி ஆட்டத்தை நேரில் கண்டு ரசித்தார்.
இதையடுத்து தோனி அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்து, அவருடன் கோல்ப் விளையாடி மகிழ்ந்தார். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.

இந்த நிலையில், தல தோனி அமெரிக்காவில் தனது ரசிகர் ஒருவரிடம் இருந்து சாக்லெட்டை திருப்பி கொடுங்கள் என்று கேட்டு வாங்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சாலையில்
நடந்து வந்த தோனியை ரசிகர்கள் சிலர் சந்தித்துள்ளனர்.
அப்போது, பெண் ரசிகை ஒருவர் தோனிக்கு சாக்லேட்டும், பூங்கொத்தும் அன்பளிப்பாக வழங்கினார். பிறகு அந்த ரசிகையுடன் தோனி புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதைத் தொடர்ந்து, ஆண் ரசிகர் ஒருவர் தோனியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு, ஆட்டோகிராப்பும் கேட்டுள்ளார்.
அப்போது ஆட்டோகிராப் போட்டுக் கொடுப்பதற்கு தன் கையில் வைத்திருந்த சாக்லேட் இடைஞ்சலாக இருந்ததால் அதனை ரசிகரிடம் கொடுத்துவிட்டு ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்துள்ளார்.
அதன் பிறகு ரசிகரிடம் இருந்த சாக்லெட்டை திருப்பி கொடுங்கள் என்றுக் கேட்டு தோனி பெற்றார். இதைக்கவனித்த அங்கிருந்த ரசிகர்கள் சிரித்து மகிழ்ந்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
English Summary
ms dhoni ask choclate to fans in america