காமன்வெல்த் போட்டிகள் 2026: தங்கப் வென்றார் மீராபாய் சானு; இந்தியாவின் முதல் தங்க பதக்கம்..!
Mirabai Chanu wins gold at the Commonwealth Games 2026
ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் போட்டியில், பெண்களுக்கான பளுதூக்கும் 48 கிலோ பிரிவில், இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்கோம் மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
ஸ்னாட்ச் பிரிவில் 85 கிலோ மற்றும் கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவுகளில் 105 கிலோ என மொத்தம் 190 கிலோ தூக்கி சாய்கோம் மீராபாய் சானு சாதனைப் படைத்துள்ளார்.

இந்த தொடரில் இந்தியா வெல்லும் முதல் தங்கப்பதக்கம் இதுவாகும். அத்துடன், காமன்வெல்த் போட்டிகளில் சாய்கோம் மீராபாய் சானுக்கு இது மூன்றாவது தொடர்ச்சியான தங்கப் பதக்கமாகும். முன்னதாக 2018 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில் தங்கப் வென்றுள்ளார்.
மேலும், டோக்கியோ ஒலிம் பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற இவர். 2014-இல் கிளாஸ்கோவில் நடைபெற்ற போட்டிகளிலும் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். ஏற்கனவே இந்தியா ஒரு வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை இந்தாண்டு தொடரில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Mirabai Chanu wins gold at the Commonwealth Games 2026