'இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஷிஷ் நெஹ்ராவை நியமிக்க வேண்டும்'; காரணம் கூறும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்..! - Seithipunal
Seithipunal


2022-ஆம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணி தொடங்கப்பட்டத்தில் இருந்து தலைமைப் பயிற்சியாளராக நெஹ்ரா இருந்து வருகிறார். தனது முதல் சீசனிலேயே ஹர்டிக் பாண்டியா தலைமையிலான அணியை சாம்பியன் பட்டம் வெல்லச் செய்தார்.

அதன் பின்னர் 02 வது சீசனிலும் வெற்றி சி.எஸ்.கே அணியிடம் இருந்து பறிபோனது. தொடர்ந்து நான்கு சீசன்களில் மூன்று முறை பிளேஆஃபுக்கு அழைத்துச் சென்றதுடன், இரண்டு முறை இறுதிப் போட்டிக்கும் அணியை கொண்டு சென்றுள்ளார்.

இந்நிலையில், ஸ்போர்ட் ஸ்டாரின் இன்சைடு எட்ஜ் போட்காஸ்டில் பேசிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர், நெஹ்ராவின் பயிற்சித் திறனை பாராட்டியதோடு, இந்திய அணியில் பயிற்சியாளராக அவரது வாய்ப்பையும் சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.

இந்தியா ஒரு டி20 பயிற்சியாளரைத் தேடினால், முடிவுகளை நிரூபித்துக் காட்டியவர் இவர்தான் என்றும், அவருடைய சாதனை அபாரமானது. ஆஷிஷ் நெஹ்ரா முழுக்க முழுக்க கிரிக்கெட் அறிவும், புத்திசாலித்தனமும் கொண்டவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

அவருடன் கிரிக்கெட் பற்றி பேசினால், அவர் உணர்ச்சிவசப்படுபவர் அல்ல. தனது அணியில் உள்ள பிரச்சினைகளை மிகவும் நடைமுறையாகப் பார்த்து தீர்வு காணக் கூடியவர் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவர் ஆட்டத்தை மிகத் துல்லியமாக கணிக்க கூடியவர் என்றும், கிரிக்கெட்டுக்கு அப்பாற்பட்ட விஷயங்களில் அதிகம் சிந்திக்க மாட்டார் என்று கூறியுள்ளார். மேலும், யாரையாவது மகிழ்விக்க வேண்டும், பதவியைத் தக்கவைத்துக் கொள்ள சில அரசியல் விளையாட்டுகள் ஆட வேண்டும் என்ற எண்ணமும் அவருக்கு இல்லை. அதனால்தான் அனைத்து வீரர்களும் அவரை மதிக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரு பயிற்சியாளராக கிடைக்கும் வெற்றி, அவரை பாதிப்பதில்லை என்பதை நீங்கள் பார்க்க முடியும் என்றும், வெற்றிக்கான முழு பாராட்டையும் தனக்கே எடுத்துக்கொள்ள அவர் விரும்பமாட்டார் என்றும், கடின உழைப்பை மிகவும் எளிதாகச் செய்கிற ஓர் எளிமையான மனிதர். அவர் இந்த வேலையை உண்மையாகவே நேசிக்கிறார் என்று பாராட்டியுள்ளார்.

அத்துடன், இந்திய அணிக்காக அவர் பந்துவீச்சுப் பயிற்சியாளராக வரக்கூடாது என்று தான் நினைப்பதாகவும், அவர் தலைமைப் பயிற்சியாளராக இருந்து, வெவ்வேறு கேப்டன்களின் கீழ் தனது அணியை இவ்வளவு வெற்றிகரமாக வழி நடத்தியவர். அவர் இந்திய அணிக்கு வந்தால், தலைமைப் பயிற்சியாளராகவே வர வேண்டும் என்று மஞ்ச்ரேக்கர் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Manjrekar suggests that the Indian team should appoint Ashish Nehra as their Head Coach


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->