தினேஷ் கார்த்திக்கின் பரிதாபமான சோதனை முயற்சி! சொதப்பல் கொல்கத்தா!  - Seithipunal
Seithipunal


ஐபிஎல் லீக் போட்டியில் இன்றைய  முதலாவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்வதாக அறிவித்தார். அதனையடுத்து கொல்கத்தா அணி முதலில் பேட்டிங்கை ஆரம்பித்தது. 

அந்த அணியில் இன்று சில மாற்றங்களை அந்த அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் செய்திருந்தார். ராபின் உத்தப்பா, குலதீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா ஆகியோரை நீக்கிவிட்டு அவர்களுக்கு பதிலாக, ரிங்கு சிங், காரியப்பா, பிரித்திவிராஜ்,  ஆகியோர் அணியில் இணைக்கப்பட்டனர். ராக்கெட் வேகத்தில் ஆரம்பித்த கொல்கத்தா அணியின் தொடக்கமானது பின்னர் ஆமை வேகத்தில் நகர்ந்தது. 

முதல் இரண்டரை ஓவர்களில் மட்டுமே 42 ரன்கள் குவித்த கொல்கத்தா அணி அடுத்த 8 ஓவர்களில் 40 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கிறிஸ் லின் 47 பந்துகளில் 51 ரன்களும், சுனில் நரைன் 8 பந்துகளில் 25 ரன்கள் குவித்து அசத்தினார். அதற்கு அடுத்தபடியாக அதிக பட்சமாக ரிங்கு சிங் 25 பந்துகளில் 30 ரன்கள் குவித்தார். 

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட  ஆண்ட்ரே ரசெல் இறுதி நேரத்தில் அடித்து ஆட வேண்டிய நெருக்கடியில் 9 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மிடில் ஓவர்களில் கொல்கத்தா அணி வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது. மேலும் தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் லின் ஆட்டம்  மந்தமாக இருந்ததால் ராக்கெட் வேகத்தில் தொடங்கிய அந்த அணியின் ஸ்கோர் இறுதியில் சுமாரான இலக்கை அடைய வைத்தது. 

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை மட்டுமே கொல்கத்தா அணி எடுத்திருந்தது. ஹைதராபாத் அணி தரப்பில் கலீல் அஹமட் 3 விக்கெட்டுக்களையும், புவனேஷ்வர் 2 விக்கெட்டுக்களையும், ரஷீத் கான், சந்தீப் ஷர்மா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்கள். 

கொல்கத்தா அணியின் டாப் ஆர்டரில் களமிறங்க விரும்பிய அதிரடி ஆட்டக்காரர் ஆண்ட்ரே ரசெல் அநியாயத்திற்கு 17 ஆவது ஓவரில் தான் களமிறக்கப்பட்டார். இதுவே அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்து போனது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kolkata middle order batsmen failed to score quick runs


கருத்துக் கணிப்பு

திமுக காங்கிரஸ் கருத்து யுத்தம்..! சட்டமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி
கருத்துக் கணிப்பு

திமுக காங்கிரஸ் கருத்து யுத்தம்..! சட்டமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி
Seithipunal