கேரள மகளிர் கிரிக்கெட் அணியின் தூதரான பிரபல நடிகை: வைரலாகும் புகைப்படம்!
Kerala womens cricket team ambassador Famous actress
நடிகை கீர்த்தி சுரேஷ், கேரள மாநிலத்தின் மகளிர் கிரிக்கெட் அணியின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கேரளா, திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கிரிக்கெட் சங்கம் நிகழ்ச்சியில் நடிகை கீர்த்தி சுரேஷ் மகளிர் அணிக்கான விளம்பர தூதராக பொறுப்பேற்றுள்ளார்.

இதனை தொடர்ந்து வருகின்ற 26 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ள இந்தியா-ஆஸ்திரேலியா டி20 போட்டிக்கான இணையதள டிக்கெட் விற்பனையையும் நடிகை கீர்த்தி சுரேஷ் தொடங்கி வைத்தார்.
இந்த விழாவின்போது நடிகை கீர்த்தி சுரேஷ், தேசிய அணிக்காக முதல் தர போட்டிகளில் விளையாட தகுதி பெற்ற கேரளாவைச் சேர்ந்த வீராங்கனை மின்னு மணியை வாழ்த்தினார்.

மேலும் கீர்த்தி சுரேஷ் கேரள மகளிர் கிரிக்கெட் அணியின் ஆடையை அணிந்து வீராங்கனைகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
English Summary
Kerala womens cricket team ambassador Famous actress