ஜெர்மனியை வீழ்த்திய ஜப்பான்.. மைதானத்தில் ரசிகர்கள் நெகிழ்ச்சியான செயல்.. ரசிகர்கள் பாராட்டு.! - Seithipunal
Seithipunal


2022 பிஃபா கால்பந்து உலகக்கோப்பை போட்டியானது கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்கின்றனர். 

இதில் நேற்று நடைபெற்ற 'ஈ' பிரிவில் நடந்த லீக் சுற்று போட்டியில் உலகின் தலைசிறந்த அணியான ஜெர்மனி அணியை எதிர்த்து ஜப்பான் அணி விளையாடியது.

இந்த போட்டியில் கால்பந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக  2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணி வெற்றிபெற்றது. உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் 4 முறை சாம்பியனான ஜெர்மனி அணியை வீழ்த்தி ஜப்பான் அணி கால்பந்து ரசிகர்களை அதிர்ச்சியை கொடுத்தது.

அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் ஜப்பான் அணிக்கு கிடைத்த முதல் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்பான் அணியின் இந்த வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை மைதானத்தில் இருந்த அந்நாட்டு ரசிகர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடினர். இதனையடுத்து போட்டி முடிந்து வெளியே செல்லும் முன்பு ஜப்பான் ரசிகர்கள் ஸ்டேடியத்தில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்தனர். தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Japan fans clean stadium after victory Germany


கருத்துக் கணிப்பு

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீட்டை காங்கிரஸ், மார்க்சிஸ்ட், பாஜக வரவேற்று இருப்பது பற்றி உங்களின் பார்வைAdvertisement

கருத்துக் கணிப்பு

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீட்டை காங்கிரஸ், மார்க்சிஸ்ட், பாஜக வரவேற்று இருப்பது பற்றி உங்களின் பார்வை
Seithipunal