தோனி, கோலி எங்கள் ஹிரோ! ஈரான் வீரர்களின் சோக கதை! உலகை அதிரவைத்த பேட்டி! - Seithipunal
Seithipunal


உலகின் சில நாடுகளில் மட்டுமே கிரிக்கெட் போட்டி கொண்டாடப்படுகிறது. பெரும்பாலும் கால்பந்து தான் பலநாடுகளின் பிரதான விளையாட்டாக திகழ்கிறது.

அப்படி ஒரு நாடான ஈரான் நாட்டில், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு, நம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்கள் எம்.எஸ்.தோனி மற்றும் விராட் கோலி தான் ஹிரோவாக, பயிற்சியாளராக திகழ்ந்து வருகின்றனர் என்ற செய்தி தெரியுமா உங்களுக்கு?

ஆம், இதுவரை யாரும் அறியாத இந்த செய்தி, நேற்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு, ஈரான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் அஸ்கர் அலி ரெய்சி அளித்த பேட்டியின் மூலம் உலகமே அறியும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அஸ்கர் அலி ரெய்சியின் அந்த பேட்டியில், ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடும் அளவிற்கு எங்கள் ஈரான் கிரிக்கெட் வீரர்கள் திறமையானவர்கள். ஆனால், எங்களால் ஒரு சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை உருவாக்க முடியவில்லை. 

வீரர்கள் திறமையானவர்களாக இருந்தும் சிறந்த பயிற்சி, சரியான உள்கட்டமைப்பு மற்றும் உபகரணங்கள் இல்லாததால் எங்களால் சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்க முடியவில்லை.

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர்களான எம்.எஸ்.தோனி மற்றும் விராட் கோலியை எங்கள் வீரர்கள் கொண்டாடுவார்கள். தோனி மற்றும் கோலி போன்ற வீரர்களின் வீடியோக்களை மேற்கோள்காட்டி எனது வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறேன்.

எங்கள் நாட்டிற்கு அமெரிக்கா விதித்த பொருளாதார தடையால், சர்வதேச அளவில் போதுமான நிதியை திரட்ட முடியவில்லை. 

எங்களது வீரர்களுக்கு சிறந்த பயிற்சி அளிக்கவும், உலகத் தரம் வாய்ந்த மைதானத்தை உருவாக்கவும், இந்திய கிரிக்கெட் வாரியம் உதவ வேண்டும்" என்று அஸ்கர் அலி ரெய்சி கோரிக்கை விடுத்துள்ளார்.

இவரின் இந்த பேட்டி இந்திய ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மேலும், உலக அளவிலும் இவரின் கோரிக்கை கவனம் ஈர்த்து வருகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Iran cricket coach speech about MS Dhoni and Virat Kohli


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->