IPL 2025 RRvsMI: ஒவ்வொரு சிக்ஸருக்கும் ஆறு வீடுகளுக்கு இலவச சூரிய மின்சாரம்!
IPL 2025 RRvsMI one six free Solar power in 6 house
இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில், ஒவ்வொரு சிக்ஸருக்கும் சூரிய மின்தகடுகள் வழங்கப்படும் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அறிவித்துள்ளது.
ஐபிஎல் 2025 தொடரின் 50வது ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. கடந்த ஐந்து போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற மும்பை, பிளே ஆஃபுக்கு உறுதி செய்யும் களத்தில் இறங்குகிறது.
மாறாக, ஒரு தொடர் தோல்விக்குப் பிறகு, இளம் வீரர் சூர்யவன்ஷியின் அசத்தலான ஆட்டத்தால் முந்தைய ஆட்டத்தில் வெற்றியை மீட்டுள்ள ராஜஸ்தான், மீண்டும் தன் நிலையை உறுதிசெய்ய முயல்கிறது.
இந்தப் போட்டியின் சிறப்பு அம்சமாக, 'பிங்க் ப்ராமிஸ்' என்ற திட்டத்தின் கீழ், போட்டியில் இரு அணிகளும் அடிக்கும் ஒவ்வொரு சிக்ஸருக்கும், ஆறுக் குடும்பங்களுக்கு சூரிய மின்தகடுகள் மூலம் இலவச மின் வசதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு சாதகமான, அதே சமயத்தில் ஏழை மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த இந்த முயற்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
English Summary
IPL 2025 RRvsMI one six free Solar power in 6 house