அடுத்த ஐபிஎல் சீசனில், எம்எஸ் தோனி களமிறங்க இரண்டு சிக்கல்! அவரே சொன்ன அதிகாரபூர்வ செய்தி!
IPL 2025 CSK MS Dhoni
நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் எட்டு ஆட்டங்களில் விளையாடிய ஜஸ்பிரித் பும்ரா, 15 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். மேலும் இதன் காரணமாக டி20 உலக கோப்பை தொடரின் நாயகன் என்ற விருதும் அவருக்கு கிடைத்தது.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தனக்கு பிடித்தமான பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தான் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஒரு நிகழ்ச்சியில் பேசிய மகேந்திர சிங் தோனி, எனக்கு பிடித்தமான பந்துவீச்சாளர் ஒருவரை மட்டும் தேர்ந்தெடுப்பது மிக எளிதான ஒன்று. காரணம் அந்த இடத்தில் பம்ப்ரா இருக்கிறார்.
அதே சமயத்தில் எனக்கு பிடித்தமான பேட்ஸ்மேன் யார் என்று கேட்டால்.. ஒருவரை மட்டும் தேர்ந்தெடுப்பது கடினமான ஒன்று. நம்மிடம் சிறந்த பேட்ஸ்மேன்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அதற்காக நம்மிடம் சிறந்த பந்துவீச்சாளர்கள் இல்லை என்று பொருள் கிடையாது என்று எம்எஸ் தோனி தெரிவித்தார்.
மேலும் அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாடுவீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த எம்எஸ் தோனி, அதனைப் பற்றி சிந்திப்பதற்கு இன்னும் நேரம் உள்ளது. ஒரு அணி வீரர்களை தக்க வைப்பதில் என்ன மாதிரியான விதியினை கொண்டு வரப் போகிறார்கள் என்பது தெரியவில்லை.
அடுத்து நடக்க உள்ள ஐபிஎல் தொடரில் நான் விளையாடுவேனா என்பது என் கையில் இல்லை. எனவே, புதிய விதிகள் வரட்டும், அணியின் நலன் கருதி நான் எனது முடிவை அறிவிப்பேன் என்று மகேந்திர சிங் தோனி தெரிவித்தார்.