வங்கதேச மாணவர்கள் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி கொலை; அரசியல் பழிவாங்கல் என குற்றப்பத்திரிகையில் தகவல்..! - Seithipunal
Seithipunal


வங்கதேசத்தில் அடுத்த மாதம் பொது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. கடந்த 21 நாட்களில் ஆறு இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக, கடந்த 18-ஆம் தேதி வங்கதேச மாணவர்கள் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் அங்கு வன்முறை சம்பவங்கள் தீவிரம் அடைந்துள்ளன. அங்குள்ளவர்கள் ஹிந்துக்களை தேடிப்பிடித்து தாக்குவதுடன், அவர்களின் வீடுகளுக்கு தீ வைக்கும் சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.

இந்திலையில், ஷெரீப் ஓஸ்மான் ஹாதி கொலை குறித்து இன்று வங்கதேச போலீசார் நீதிமன்றத்தில்குற்ற பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

ஷெரீப் ஓஸ்மான் ஹாதி அவாமி லீக் கட்சியின் உத்தரவின் பேரில் அரசியல் பழிவாங்கல் காரணமாக கொல்லப்பட்டுள்ளார். இந்தக் கொலை தொடர்பாக 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பபட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், பொது பேரணிகள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம், ஹாதி தற்போது தடைசெய்யப்பட்ட அவாமி லீக் மற்றும் சத்ரா லீக்கின் கடந்தகால நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும், ஹாதியின் வெளிப்படையான கருத்துக்கள் தடை செய்யப்பட்ட கட்சியின் தலைவர்கள் மற்றும் ஆர்வலர்களை கோபப்படுத்தியதன்  காரணமாகவே இந்த கொலை சம்பவம் அரங்கேறி உள்ளதாக வங்கதேச போலீசார் குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The charge sheet states that Hady the leader of the Bangladeshi student organization, was murdered due to political vendetta


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?


செய்திகள்



Seithipunal
--> -->