#IPL2023 : கோலி அதிரடி சதம்.. ப்ளே ஆப் சுற்று வாய்ப்பை தக்க வைத்த பெங்களூர் அணி.!
IPL 2023 RCB won by 8 wickets against SRH
16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 31ஆம் தேதி தொடங்கிய நிலையில், தற்போதைய இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் இனிமேல் நடைபெறும் லீக் போட்டியும் மிகவும் முக்கியமாகும். இதில் தோல்வி அடையும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவது மிகவும் கடினமாக இருக்கும்.
அந்த வகையில் டெல்லி மற்றும் ஹைதராபாத் ஆகிய இரு அணிகளும் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது.
இந்த நிலையில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமென்றால் ஹைதராபாத் அணியுடன் கட்டாய வெற்றி பெற வேண்டிய நிலையில் பெங்களூர் அணி நேற்று விளையாடியது.

அந்த வகையில் நேற்று இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத் மைதானத்தில் நடைபெறும் 64வது லீக் போட்டியில் ஹைதராபாத் அணியும், பெங்களூர் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பௌலிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் குவித்தது. ஹைதராபாத் அணியில் அதிரடியாக விளையாடிய ஹென்ரிக் க்ளாசன் 51 பந்துகளில் 104 ரன்கள் குவித்தார்.
அதனைத் தொடர்ந்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி 19.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 187 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

பெங்களூர் அணிகள் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 63 பந்துகளில் 100 ரன்களும், டூப்பிளசிஸ் 47 பந்துகளில் 71 ரன்களும் எடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் பெங்களூர் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்பை தக்க வைத்துள்ளது. அந்த வகையில் மீதமுள்ள லீக் போட்டிகளின் முடிவுகள் மற்றும் பெங்களூர் அணியின் கடைசி லீக் போட்டியை பொறுத்து ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறுமா என்பது தெரியும்.
மேலும் பெங்களூர் அணி தற்போது 13 போட்டிகளில் விளையாடி உள்ள நிலையில் 7 போட்டிகளில் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
English Summary
IPL 2023 RCB won by 8 wickets against SRH