#IPL2023 : 14 ஆண்டுகால கும்ளேவின் சாதனையை சமன் செய்த மும்பை வீரர் ஆகாஷ் மத்வால்.! - Seithipunal
Seithipunal


நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், இன்று முதல் ப்ளே ஆப் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது.   அதனைத் தொடர்ந்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி தொடக்கத்தில் சிறப்பாக விளையாடியது.

அதன் பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் மத்வாலின் அபாரமான பந்துவீச்சில் லக்னோ அணி அடுத்தடுத்த விக்கெடுகளை இழந்து தடுமாறியது. இறுதியாக லக்னோ அணி 16.3 ஓவர்களில் அனைத்து விக்கெடுகளையும் இழந்து 101 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி குவாலிஃபயர் 2 போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இதில், மும்பை இந்தியன்ஸ் அணியில் சிறப்பாக பந்து வீசிய ஆகாஷ் மத்வால் 3.3 ஓவர்கள் பந்து வீசி 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அனில் கும்ளேவின் சாதனையை முறியடித்துள்ளார்.

அந்த வகையில் கடந்த 2009ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக , பெங்களூரு அணிக்காக விளையாடிய அணில் கும்ப்ளே 5 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்திய 14 ஆண்டுகால சாதனையை ஆகாஷ் சமன் செய்து சாதனை படைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2023 Aakash madwal equalise Anil Kumble record


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->