#BigBreaking | ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை அணியுடன்  அணி மோதுகிறது.!  - Seithipunal
Seithipunal


14வது ஐபிஎல் டி20 தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இன்று இறுதிப் போட்டியில் நுழைவதற்கான இரண்டாவது ஆட்டம் ஷார்ஜாவில் நடந்து முடிந்துள்ளது. இதில், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல் அணியும், மோர்க்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை செய்தன. 

இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்ட பட்டதில் கொல்கத்தா அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. அதன்படி, டெல்லி அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர் அதிரடி மன்னன் பிரித்வி ஷா எடுத்ததும் தனது அதிரடி ஆட்டத்தை எப்போதும் போல வெளிப்படுத்திய போதிலும், வருண் சக்கரவர்த்தியின் நேர்த்தியான பந்து வீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். (12 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரி உட்பட 18 ரன்கள்)

முதல் விக்கெட் விழுந்ததும் டெல்லி அணியின் அதிரடி ஆட்டம் காணாமல் போனது, ஷிகர் தவான் - ஸ்டோனிக்ஸ் ஜோடி கடைசி விக்கெட்டுக்கு களமிறங்கியது போல் நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்த, இவ்வளவு ஒரு முக்கியமான ஆட்டத்தில் இவ்வளவு நிதானம் தேவையா என்று டெல்லி அணி ரசிகர்கள் கதறிக்கொண்டு இருந்தனர். 

மிதமான வேகத்தில் டெல்லி அணியின் ரன் உயர தொடங்க. 12 வது ஓவரின் 3 பந்தில் ஸ்டோனிக்ஸ் (23 பந்துக்கு 18 ரன்கள்) ஒரு வழியாக தனது விக்கெட்டை பறிகொடுக்க, தவானுடன் கைகோர்த்த ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தவான் 36 ரங்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ரிஷப் பண்ட் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார்.

ஸ்ரேயாஸ் ஐயர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 30 ரன்களை சேர்த்தார். இறுதியில் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், 5 விக்கெட் இழப்புக்கு, 135 ரன்களை சேர்த்தது. இதனையடுத்து 136 ரன்கள் எடுத்தால் இறுதிப்போட்டிக்கு சென்று விடலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி கடைசி ஓவரில் திகில் வெற்றி பெற்றது.

கொல்கத்தா அணியின் இந்த வெற்றியின் மூலம் கோப்பைக்கான இறுதி போட்டியில் சென்னை அணியுடன் மொத உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ipl 2021 final csk vs dc


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->